Connect with us
actress

Cinema News

கொடூரமாக இறந்த நடிகைகள்..! அதுவும் இந்த வயசுலயா..!அடக்கொடுமையே..!


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நடிகர் நடிகைகள் தற்கொலை செய்வது செய்து கொள்வது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தற்பொழுது மிகவும் சாதாரண விஷயமாக மக்களிடம் கடந்து செல்கிறது. திரைப்படங்களை தாண்டி நிஜ வாழ்க்கையில் அவர்களால் சாதிக்க முடியாத காரணத்தினால் சீக்கிரமாகவே மரணத்தை தேடி ஓடுகிறார்கள். இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறத்தில் அவர்களின் திரைப்பயணம் நன்றாக சென்று கொண்டிருக்கும் போதே இயற்கையாகவே மரணம் அவர்களை தேடி வருகிறது. அப்படி இளம் வயதிலேயே எதிர்பாராத வகையில் இயற்கையாக மரணித்த நடிகைகளை பற்றி காணலாம்.

ஆர்த்தி அகர்வால் :

aarthi agarwal

aarthi agarwal

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆர்த்தி அகர்வால். தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ”பம்பரக் கண்ணாலே” என்னும் திரைப்படத்தில் நடித்திருப்பார். இவர் தமிழில் நடித்த ஒரே திரைப்படம் இதுதான். இவர் அதிகமான தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு உடல் எடை அதிகம் இருப்பதால் அதைக் குறைப்பதற்காக அங்குள்ள மருத்துவமனையில் கொழுப்பு உறிஞ்சல் முறையில் சிகிச்சை பெற்று வந்தார். அதிக முறை சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக பக்க விளைவு ஏற்பட்டது. பின்னர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் சாகும்போது இவருக்கு வயது வெறும் 31 தான்.

சிந்து :

sindhu

sindhu

இவர் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் தங்கச்சி மகள் தான் சிந்து. ஆரம்பக் காலத்திலேயே இவர் சினிமா பின்புலத்தை கொண்டிருந்ததால் பட வாய்ப்புகள் இவருக்கு குவிய தொடங்கியது. நடிகர் ராம்கி உடன் இணைந்து நடித்த ”இணைந்த கைகள்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் ”ஐயா”. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ”மெட்டிஒலி” தொடரின் மூலம் மிகவும் பிரபலமானார். இவருக்கு நீண்ட நாட்களாக நுரையீரல் பாதிப்பு இருந்து வந்தது. 2005 ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மூச்சுத் தினறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெறும் 34 வயதிலேயே உயிரிழந்த சம்பவம் திரை உலகத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மோனிஷா உன்னி :

monisha unni

monisha unni

இவர் தமிழ் சினிமாவில் திராவிடன், உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன், மூன்றாவது கண் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர். ஒரு சமயம் ஷூட்டிங்கிற்காக அவரது அப்பா மற்றும் அம்மாவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு இவர் மட்டும் உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக அவரின் தாய் தந்தைக்கு எதுவும் ஆகாமல் பிழைத்துக் கொண்டனர். தமிழ் சினிமாவில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து வளர்ந்து வரும் கதாநாயகி வந்த இவர் வெறும் 21 வயதிலேயே இருந்தது தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக பார்க்கப்பட்டது. இவரின் இறப்புக்குப் பின்புதான் தமிழில் இவர் நடித்த மூன்றாவது கண் திரைப்படம் வெளியானது.

திவ்யபாரதி :

divya bharathi

divya bharathi

இவர் தமிழ் சினிமாவில் ”நிலா பெண்” என்ற ஒரே ஒரு தமிழ் திரைப்படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். இதைத் தவிர இந்தி,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வெறும் 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவரது கணவருடன் மும்பையில் 15 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக மேலிருந்து குதித்து இறந்தார். அப்பொழுது அவர் கணவரும் உடன் இருந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இது கொலையா ?அல்லது தற்கொலையா ? என இன்று வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

திவ்யா சாக்‌ஷி :

divya shakshi

divya shakshi

இவர் போப்பாலை சேர்ந்த நடிகை ஆவார். இவர் ஒரே ஒரு ஹிந்தி படத்தில் மட்டும் நடித்துள்ளார். ஹிந்தி படங்கள் துணை நடிகையாக நடித்து வந்தார். வெறும் 29 வயதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். துணை நடிகை என்பதால் சோஷியல் மீடியாக்களில் பெரிதும் பேசப்படாமல் மூடி மறைக்கப்பட்டது.

இந்திய சினிமாவில் இன்று வரை 40 வயதுக்கும் மேற்பட்டோர் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இவர்கள் வெறும் 35-திற்கும் குறைவான வயதில் உயிர் பிறந்தது சினிமாவிற்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top