இந்த கலரில் இருந்தா கண்டிப்பா கிராமத்து ரோல் தான் மாற்றமே இல்ல - ராதிகா ஆப்தே

by adminram |   ( Updated:2021-10-07 11:09:29  )
இந்த கலரில் இருந்தா கண்டிப்பா கிராமத்து ரோல் தான் மாற்றமே இல்ல - ராதிகா ஆப்தே
X

இந்திய சினிமாவில் நிறப்பாகுபாடு என்றுமே இருக்கிறது. இப்போது உள்ள நடிகைகள் யாராவது நிறம் குறைவாக இருந்து பார்த்துள்ளீர்களா? ராதிகா ஆப்தே குற்றம் சாட்டியுள்ளார்.

பாலிவுட் திரைப்படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகளில் மிக முக்கியமான நடிகை, ராதிகா ஆப்தே. தமிழில், தோனி திரைப்படத்திலும், கபாலி படத்திலும், கார்த்திக் நடிப்பில் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வளவு பெரிய நடிகை இல்லை என்றாலும் இந்தியில் பெரிய நடிகையாகவும், சர்ச்சைக்குரிய நடிகையாகவும் இருந்து வருகிறார்.
சமூகவலை தளங்களில் அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேலும், வெப் தொடர்களில் நடிப்பதில் பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ராதிகா ஆப்தே ”இந்திய சினிமாவில் நிற பாகுபாடு இன்றும் உள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள புதுமுக நடிகைகளில் யாராவது நிறம் குறைவாக இருந்து பார்த்துள்ளீர்களா? நீங்கள் சற்று நிறம் குறைவாக இருந்தாலும் கிராமத்துப் பெண் வேடம்தான் தருவார்கள்” என கூறியுள்ளார்.
Next Story