Actress Pallavi: இயக்குனர்கள் தயாரிப்பாளர்களை பொருத்தவரைக்கும் ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்வது அவர்களின் சாய்ஸ் தான். அதுவும் அந்த காலங்களில் எல்லாம் அதாவது பாலச்சந்தர் பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்கள் எல்லாம் பெரும்பாலும் அவருடைய படங்களில் புதுமுக நடிகைகளை தான் பொதுவாக தேர்வு செய்து நடிக்க வைப்பார்கள் .
அதில் அவர்களுக்கு ஒரு கியூரியாசிட்டி. அனுபவம் வாய்ந்த நடிகைகளை நடிக்க வைத்தால் கதைக்கு ஏற்ப அவர்களை கொண்டு வர முடியுமா என்பது கூட சந்தேகமாக இருந்திருக்கலாம். புதுமுக நடிகை என்றால் தனக்கு வேண்டிய நடிப்பை அவர்களிடம் இருந்து எளிதாக பெற்றுவிடலாம் .அதனாலேயே பெரும்பாலும் புதுமுக நடிகைகளை தான் அவர்கள் படங்களில் போடுவார்கள்.
இதையும் படிங்க: நான் திங்கிற சோறு நீ போடுகின்ற சோறு… பாரதிராஜா யாரை இப்படி சொல்றாருன்னு தெரியுமா?
அந்த வகையில் அறுவடை நாள் என்ற திரைப்படத்திற்காக புதுமுக நடிகையை நடிக்க வைக்கலாம் என்ற ஒரு ஐடியா ஜி எம் குமாருக்கு வந்திருக்கிறது. ஆனால் அது அவருடைய ஐடியா இல்லையாம். பாலு மகேந்திராவின் ஐடியாவாம் .அந்த சமயத்தில் நடிகை பல்லவியின் புகைப்படம் இவர்கள் கண்ணில் பட பல்லவியை ஆடிஷனுக்கு வரவழைத்து இருக்கிறார்கள்/
ஒரு சீன் பேப்பரை கையில் கொடுத்து இதே போல் நடித்துக் காட்டு என சொல்ல முதல் நாளே மிக அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தினாராம் பல்லவி .இதனுடைய நடிப்பை பார்த்து இந்த நடிகை தான் இந்த படத்திற்கு மிகப் பொருத்தமானவர் என சொல்லி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் .இது தெரிந்த விநியோகஸ்தர்கள் சில பேர் அலுவலகத்திற்கு வந்து ஜி எம் குமாரிடம் பல்லவியை எப்படி போட்டீர்கள்?
இதையும் படிங்க: சாரியெல்லாம் நமக்கு என்ன புதுசா? ஓம் சாந்தி.. செஞ்ச தவறுக்காக வருந்திய சிம்பு
ஆனால் சரியான சாய்ஸ். கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்து மாபெரும் வெற்றியை கொடுத்தவர் இந்த நடிகை. அதுமட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் போன்ற படங்களில் 13 படங்களில் நடித்திருக்கிறார். அதனால் இந்த படமும் உங்களுக்கு ஒரு சிறப்பான வெற்றியைத் தரும் என கூறினார்களாம். இதைக் கேட்டதும் ஜி எம் குமாருக்கு பெரும் அதிர்ச்சியாகி விட்டதாம்.
புதுமுக நடிகை என்று சொல்லித்தானே இவர் வந்தார். ஆனால் இந்த படத்திற்கு முன் 13 படங்களின் நடித்திருக்கிறாரா என மேற்கொண்டு அதைப் பற்றி யோசிக்காமல் பல்லவியையே இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் ஜி எம் குமார். இந்த படத்தில் பிரபு ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பல்லவி நடித்திருப்பார்.
இதையும் படிங்க: ராமராஜனுக்கும் ராதாரவிக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே..!
தமிழில் அவர் நடித்த முதல் திரைப்படம் இந்தப் படம் தான். அதன் பின் ஏகப்பட்ட படங்களில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் பல்லவி. குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் பல்லவி. இந்த செய்தியை ஜி.எம். குமாரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…