தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்தான் சமந்தா. இவருக்கு எந்த சினிமா பின்னணியும் இல்லை. சென்னை பல்லாவரத்தில் வசித்தது இவரின் குடும்பம். மாடலிங் மற்றும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சினிமாவில் நுழைந்தவர் இவர்.
மாஸ்கோவின் காவேரி என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் பல வருடங்கள் பல படங்கள் என நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். அப்படி நடிக்கும்போது நடிகர் நாக சைத்தன்யா மீது காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். ஒருபக்கம். தோல் வியாதியிலும் அவதிப்பட்டு வந்தார்.

ஆனாலும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது தந்தை ஜோசப் பிரபு மரணமடைந்துவிட்டதாக சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ‘மீண்டும் சந்திக்கும் வரை அப்பா’ என பதிவிட்டு இதயம் உடைந்துவிட்ட இமேஜை பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் சொல்லி பதிவிட்டு வருகிறார்கள்.
