நடிகைக்கு கமல்ஹாசன் அனுப்பிய பரிசு!.. பின்னால் இருக்கும் காரணம் இதுதானாம்!..

kamal
Actor Kamal: கிட்டத்தட்ட 60ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கமல் எவ்வளவோ பார்த்திருப்பார். அக்கால சினிமா இக்கால சினிமா என சினிமாவை இரண்டு வகையாக பிரிக்கலாம். இரண்டிலும் மிக நெருக்கமாக தொடர்பு கொண்டவர் கமல்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என அவர்கள் கையில் விளையாடியவர். அப்படிப்பட்ட கமல் இன்று உலக நாயகனாக ஜொலிக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் சினிமா மீது அவர் கொண்டுள்ள பற்றுதான். ஒருவரின் நடிப்பை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட கூடாது. அவர்களை பாராட்டுவதோடு இன்னும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: 12 நாட்கள் ஒரே பேண்ட் ஷர்ட்!.. அழுக்கு பையனாக இருந்த எஸ்.ஜே.சூர்யா!.. எல்லாம் அதுக்காகத்தான்!…
அப்படிப்பட்ட பல சம்பவங்கள் அக்காலத்தில் நடந்திருக்கிறது. இதில் கமலும் அடங்குவார். ஒரு நடிகையின் நடிப்பை பார்த்து மிரண்ட கமல் அந்த நடிகைக்கு பட்டுப்புடவையை பரிசாக வழங்கியிருக்கிறார். அந்த நடிகை வேறு யாருமில்லை. காந்திமதி.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அறிமுகமான இரவும் பகலும் படத்தில் இருந்து எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி , ரவிச்சந்திரன் போன்றவர்களின் படங்களில் நடித்ததன் மூலம் மக்களின் அபிமானங்களை பெற்றவர் காந்திமதி. கிராமிய வாசனையில் வசனத்தை பேசுவதில் வல்லவர் காந்திமதி. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்தி என 80கள் காலகட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாகவும் மாறினார்.
இதையும் படிங்க: மனுஷன் யாருக்குத்தான் என்ன பண்ணல? இளையராஜா செய்த செயலால் கதறி அழுத பாடகர் மனோ!
சிறந்த குணச்சித்திர நடிகை என்றால் அது காந்திமதி. நடிப்பில் சிங்கம் என்றும் சொல்லலாம். பல படங்களில் காந்திமதி நடித்திருந்தாலும் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் 16 வயதினிலே. அந்தப் படத்தில் அவரின் நடிப்பை பார்த்து அடுத்ததாக மண்வாசனை படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சித்ரா லட்சுமணன்.
அந்தப் படத்தில் கிழவியாக நடித்து அவர் பேசிய வசனங்கள் இன்றும் நம்மை நியாபகப்படுத்துகின்றன. இந்தப் படத்தில் காந்திமதியின் நடிப்பை பார்த்துதான் கமல் மிகவும் உருகி அவருக்கு ஒரு பட்டுப்புடவையை பரிசாக அளித்தாராம். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க: 8 நாள் கால்ஷீட் கொடுத்தேன்… ஆனா 100 நாளை தாண்டி போயிட்டே இருக்கு… வெற்றிமாறனால் புலம்பும் முன்னணி நடிகர்…