சிறுமியாக இருந்த போதே விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் கேப்ரியல்லா. 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறுமி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.
அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு திரைப்பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிய, மீண்டும் அவருக்கு விஜய் டிவியே வாய்ப்பு கொடுத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தும் வருகிறார்.
இந்நிலையில், புடவை கட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்…
நடிகர் விஜய்…
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…