தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவர் அடுத்ததாக வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் வெளியானது. அந்த படம் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆனால் வடசென்னை படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட கேரக்டரை மட்டுமே எடுத்து இந்த படத்தை படமாக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்ல வடசென்னை படத்தில் நடித்த ஆண்ட்ரியா சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இந்த படத்தில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று சமீபத்தில் படமாக்கினார்கள். அந்த ப்ரோமோ வீடியோவில் கூடவே நெல்சன் இருப்பதை பார்க்க முடிந்தது. அதனால் படத்தில் நெல்சன் ஒரு முக்கியமான ரோலில் அல்லது கேமியோ கேரக்டரில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியானது. இப்படி சிம்பு வெற்றிமாறன் படம் குறித்து அடுத்தடுத்து செய்திகள் வந்த வண்ணம் இருக்க எப்பொழுது படத்தை ஆரம்பிப்பார்கள் என்ற ஒரு கேள்விதான் அனைவரும் மத்தியில் இருந்து வருகின்றன. அதற்கு ஏற்ப படத்தை பற்றி சில பல வதந்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன.
படத்தில் சிம்பு அதிக சம்பளம் கேட்பதாகவும் அதனால் படம் கொஞ்சம் தாமதமாகும் என்றும் கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டதா என்ற கேள்விகளும் ரசிகர்கள் மனதில் எழத் தொடங்கின. சம்பள விவகாரம் தொடர்பாகத்தான் தயாரிப்பாளருக்கும் சிம்பு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சிம்பு வெற்றிமாறன் படத்தில் இதுதான் பிரச்சனை என இன்று வலைப்பேச்சில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது .
இந்த படத்தை பொருத்தவரைக்கும் வெற்றிமாறன் 150 கோடி பட்ஜெட்டில் படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இதுதான் தாணுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கின்றது .அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு செட்டே பிரம்மாண்டமாக கொண்டு வந்திருக்கிறாராம் வெற்றிமாறன். முதலில் சாதாரணமாக ஆரம்பித்து பிறகு மெல்ல மெல்ல பிரம்மாண்டமாக அந்த செட்டை அமைக்கும் பணியில் இறங்கினாராம் வெற்றிமாறன்.
இதெல்லாம் சேர்ந்து தாணுவுக்கு ஒரு பயம். சிம்பு தரப்பில் 40 கோடி கேட்டார் என ஒரு தகவல் வெளியானது. இதைப்பற்றி சிம்பு தரப்பில் கூறுவது என்னவெனில் அதாவது ஏஜிஎஸ் நிறுவனத்தில் என்ன சம்பளம் கொடுக்கிறார்களோ அதையே நீங்கள் கொடுங்கள் என்றுதான் தாணுவிடம் கேட்டோம். அதற்கு தாணுவும் சம்மதித்தார். அதனால் சம்பளத்தில் பிரச்சினை கிடையாது என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்பொழுது பட்ஜெட்டில் தான் இந்த படம் பிரச்சனையில் சிக்கியிருக்கிறது. அந்த அளவுக்கு ஒரு பெரிய பட்ஜெட்டாக வெற்றிமாறன் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே வாடிவாசல் தொடர்பாக தாணு வாங்கியது 45 கோடி அளவில் கடனாக இருக்கிறது. ஏனெனில் வெற்றி மாறனின் சம்பளம் அந்த படத்திற்காக அவர் செய்த செலவு என கிட்டத்தட்ட 45 கோடி வரை அவருக்கு கடனாக இருக்கிறது.
இதை எல்லாம் சேர்த்து சிம்பு வெற்றிமாறன் படத்தின் பட்ஜெட்டோடு ஒன்று சேர்க்க முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் சிம்பு வெற்றமாறன் படத்தின் மொத்த பட்ஜெட்டே பெரிய அளவில் போய் நிற்கும் என்றும் கூறுகிறார்களாம். இதெல்லாம் சேர்ந்துதான் இந்த படம் தொடர்பாக பெரிய பிரச்சனை ஓடிக்கொண்டிருப்பதாக வலைப்பேச்சில் தெரிவித்திருக்கிறார்கள்.
