More
Categories: Cinema History Cinema News latest news

கே.பாக்யராஜ் திரைக்கதை மன்னன் ஆனது எப்படி? சொல்கிறார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்

பொழுதுபோக்கு அம்சமாக இருந்த திரையுலகம் மெல்ல மெல்ல கதை சொல்ல ஆரம்பித்து வாழ்க்கையின் யதார்த்தங்களையும், அழகிய வாழ்வியலையும், இயற்கையோடு கலந்து சொன்னது. அது மக்களின் ரசனையைத் தூண்டி நவநாகரீக வாழ்க்கைக்குக் கொண்டு சென்றது.

காலப்போக்கில் மண்ணின் மணம் மாறாத கிராமியக் கதைகளையும், உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையும், புராண காலப்படங்களும், மன்னர்களின் படங்களும், காதல் கதைகளும் ரசிகனின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.

Advertising
Advertising

அப்போதெல்லாம் நடிகர்கள் என்றால் பாட, ஆட, சண்டை போட, பாடல் எழுத என எல்லாமே தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் கதையின் மையக்கருவை உணர்ந்து அதற்கேற்ப முகபாவனைகள் காட்டி நடிக்க முடியும்.

அதே போல கதை அமைக்கும் பணியும் கூட்டாக பலர் சேர்ந்து விவாதித்த பின்னர் தான் அமைப்பார்கள். ஆனால் இன்றோ திரையுலகம் தலைகீழாகப் போய்விட்டது.

கதை என்று ஒன்று இல்லாமலேயே பல படங்கள் சிங்கிள் லைன் என்று கதையை சொல்லிக் கொண்டு வெளியாகி வருகின்றன. கதையை விட முன்னாடி வந்து நிற்பவை குத்துப்பாடல்கள் தான். படத்தில் கடைசியில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதை விமர்சனத்தைப் படித்தால் தான் தெரியவருகிறது.

அந்த வகையில் தன்னோட ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் பல வெற்றிப்படங்களைத் தந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

ஒழுக்கம் என்ற குறும்பட வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். அதே நேரத்தில் அந்தக்காலத்தில் கதை இலாகா எப்படி இருந்தது தற்போது எப்படி உள்ளது? கலைஞானம் யார்? எப்படிப்பட்டவர் என்றும் பேசினார். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

MM

திரைக்கதையில் மாற்றங்களைக் கொண்டு வந்து எங்களுக்கு முந்தானை முடிச்சு என்ற படம் கொடுத்து முருங்கைக்காய்க்கு விளம்பரம் கொடுத்தவர் டைரக்டர் கே.பாக்யராஜ்.

ஆரம்பகாலத்துல நான் டைரக்ட் செய்த போது பல எழுத்தாளர்கள் ஒன்றாக சேர்ந்து விவாதம் செய்வார்கள். அந்த முறை எல்லாம் போயிடுச்சு.

கதை டிஸ்கஷன் என்கிறது முக்கியமான விஷயம். இப்போ முக்கியம் இல்லாம போயிடுச்சோன்னு ஒரு பயம். ஏன்னா வர்ற படம் எல்லாம் அடிதடியும் கவர்ச்சியுமா இருக்கு. கதையே காணோம்.

நான் இப்போதும் சொல்வதுண்டு. காய்கறி எல்லாம் நல்லா வைக்கிற. சைடு டிஷ் எல்லாம் நல்லா வைக்கிற. புதுமையா செய்ற. ஆனா பசி அடங்கறதுல்ல.

ஏன்னு தெரியுமா? சோறு வைக்கிறதுல்ல. கதை தான் சோறு. சோறு தான் கதை. பாக்யராஜ் ஜெயிச்சாருன்னா சும்மா ஜெயிக்கல. அந்த சோறை சரியா கொடுத்து பெயர் பெற்றதால் தான் திரைக்கதை மன்னன் பாக்யராஜ்ன்னு பேரு வந்தது.

Kalaignanam

கதை டிஸ்கஷன்ல பஞ்சு அருணாச்சலம், மகேந்திரன் சார், கலைஞானம் சார், தூயவன் சார் எல்லாம் சேர்ந்து என் படத்துக்கும் விவாதத்துக்கு வருவாங்க. தேவர் சாரோட கதை இலாகா வரைக்கும் போய் ஒண்ணா செய்வாங்க. இப்படி ஒற்றுமையும், கூட்டுறவும் இருந்த எழுத்தாளர் கூட்டத்துக்கு தலைமை வகித்தவர் கலைஞானம்.

93 வயசு. எப்படி இருக்கீங்க சார்னு கேட்டா முந்தியெல்லாம் கதை விவாதத்துக்கு ஆபீஸ்க்கு போவேன்.

இப்போ கதை விவாதத்துக்கு எல்லாரும் என் வீட்டுக்கு வர்றாங்க. நான் இன்னும் கதையை விவாதித்துக் கொண்டு இருக்கிறேன்..என்று சொல்கிற அந்த உணர்வும், நம்பிக்கையும் உள்ள சிறந்த எழுத்தாளர் கலைஞானம்.

Published by
sankaran v

Recent Posts