குட் பேட் அக்லியில் ‘சீச்சீ குமாரி ஒருத்தி’ பாடல்!. ரொம்ப கிரின்ச்சா இருக்கே!..

by சிவா |   ( Updated:2025-04-10 02:20:36  )
good bad
X

Good bad ugly: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திரைப்படம் இது. இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பக்கா அஜித் ரசிகர். எனவே, அஜித்தை தான் எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டாரோ எது எல்லாவற்றையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

அஜித் இதற்கு முன் நடித்த பில்லா, மங்காத்தா, தீனா உள்ளிட்ட பல படங்களின் ரெப்ரன்ஸை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த படத்தில் வில்லானாக அர்ஜூன் தாஸ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அடிதடியை விட்டுவிட்டு அமைதியாக வாழும் அஜித் மகனுக்காக மீண்டும் டானாக அவதாரம் எடுக்கும்படி கதையை எழுதி இருக்கிறார்கள்.

இந்த படத்தில் அஜித்துடன் ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் சிம்ரன், பிரியா வாரியர், ஜாக்கி செராப், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் பாடல்கள் யுடியூப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

GBU ajith
GBU ajith

குறிப்பாக சிறையில் அஜித் பாடும் God bless you பாடல் ரசிகர்களை தியேட்டரில் ஆட்டம் போட வைத்திருக்கிறது. குட் பேட் அக்லி படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என நினைத்த ஆதிக் ரவிச்சந்திரன் பல விஷயங்களையும் இந்த படத்தில் நுழைத்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு திடீரென ‘சீச்சி குமாரி ஒருத்தி’ என்கிற ஒரிய மொழி பாடல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது. 20 வருடங்களுக்கு முன்பு அந்த பாடலை பாடி நடித்திருந்தார் ஒருவர். அவரே மிகவும் சந்தோஷப்பட்டு வீடியோவும் வெளியிட்டார். அந்த ஒரிய மொழி பாடலை தமிழ் மொழியிலும் மாற்றி சிலர் வீடியோவை வெளியிட்டார்கள்.

இந்நிலையில், இந்த பாடலை குட் பேட் அக்லி படத்தில் வரும் ஒரு காட்சியில் ஆதிக் பயன்படுத்தி இருக்கிறார். வில்லனாக வரும் அர்ஜூன் தாஸ் ஒரு சண்டை காட்சியில் இந்த பாடலை கேட்பது போலவும், அவருக்கு பின் அஜித் அதை கேட்பது போலவும் காட்சி வருகிறது. இது ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது.

Next Story