ஆதிக் எடுத்த ஐந்து படம்.. எல்லா படத்துலயும் இருக்கிற ஒரே விஷயம்.. என்னனு பாருங்க

by Rohini |   ( Updated:2025-04-10 09:45:19  )
adhik
X

adhik

இப்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்தான். ஒரு ஃபேன் பாயாக கார்த்திக் சுப்பராஜ் எப்படி பேட்ட படத்தை எடுத்து ஹிட்டாக்கினாரோ லோகேஷ் கனகராஜ் எப்படி விக்ரம் படத்தை ஹிட்டாக்கினாரோ அந்த வரிசையில் இப்போது ஆதிக்கும் வந்துவிட்டார். ஒரு ஃபேன் பாயாக குட் பேட் அக்லி படத்தை பெரிய அளவில் பேச வைத்திருக்கிறார் ஆதிக்.

எப்போதும் போல இருக்கும் செண்டிமெண்ட், எமோஷன்ஸ் இல்லாமல் எண்டர்டெயின்மெண்ட் படமாகத்தான் குட் பேட் அக்லி படம் இருக்கிறது. திரையரங்குகளை சும்மா கதற வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். படம் பார்த்த அனைவரும் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் ஆதிக் எடுத்த ஐந்து படங்களையும் எடுத்துக் கொண்டால் ஒரு விஷயம் மட்டும் மாறவில்லை.

அது என்ன என்பதை பார்ப்போம். 2015 ஆம் ஆண்டு திரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஆதிக். அந்தப் படத்தில் ஹீரோயின் கயல் ஆனந்தி கேரக்டருக்கு ரம்யா என பெயர் வைத்திருந்தார் ஆதிக். அந்தப் படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை எடுத்தார். அந்தப் படத்திலும் தமன்னா கேரக்டருக்கு ரம்யா என்று பெயர் வைத்திருப்பார்.

அதற்கு அடுத்த படியாக 2023 ஆம் ஆண்டு வெளியான பாஹீரா என்ற படத்தில் ஹீரோயி பெயரும் ரம்யாதான். அடுத்ததாக மார்க் ஆண்டனி படத்திலும் அபிநயாவின் கேரக்டருக்கும் ரம்யா என்றுதான் பெயர் வைத்திருப்பார். இப்போது ரிலீஸான குட் பேட் அக்லி படத்திலும் திரிஷாவின் கேரக்டர் பெயர் ரம்யாதான். இப்படி தொடர்ந்து அவர் எடுக்கும் படங்களில் ரம்யா என்ற பெயர் பயணம் செய்து வருவதை பார்க்க முடிகிறது.

அந்த பேருக்கும் ஆதிக்கும் என்ன சம்பந்தம்? ஏதாவது ப்ளாஷ்பேக் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய மனைவி பெயர் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது. காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆதிக். குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அவருடைய ரேஞ்சே மாறிவிடும் என்றுதான் தெரிகிறது.

Next Story