தனுஷை கழட்டிவிட்ட ஏகே!.. அஜித்தின் அடுத்த பட இயக்குனர் அவர்தானாம்!..

by சிவா |   ( Updated:2025-05-02 07:46:14  )
dhanush
X

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் அஜித் குமார். அமராவதி படத்தில் நடிக்க துவங்கி இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். சினிமாவில் பல வெற்றி, தோல்விகளை பார்த்துவிட்டார். இவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

கமல் - ரஜினிக்கு அடுத்து அஜித் - விஜய் என்கிற போட்டி சினிமாவில் உண்டானது. இப்போது வரை இது தொடர்ந்து வருகிறது. அதேநேரம் அரசியலுக்கு போய்விட்டதால் விஜய் இனிமேல் சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லை. எனவே, அஜித்துக்கு எந்த போட்டியும் இப்போது கோலிவுட்டில் இல்லை.

விடாமுயற்சி படம் சரியான வெற்றியை பெறாத நிலையில் அடுத்து வெளியான குட் பேட் அக்லி படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரனே இப்படத்தை இயக்கியிருந்ததால் ஒரு ஃபேன் பாய் மொமெண்ட்டாகவே இந்த படம் உருவாகி அஜித் ரசிகர்களை கவர்ந்தது.

adhik

இந்த படம் 250 கோடி வரை வசூல் செய்து தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது. அஜித்துக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் தொடர்ந்து அவரின் இயக்கத்தில் நடிப்பார். அப்படித்தான் சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் ஆகியோரின் அஜித் தொடர்ந்து நடித்தார். அதுபோல ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் அஜித் தொடர்ந்து நடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடம் இருந்து.

ஒருபக்கம், அஜித்திடம் நடிகர் தனுஷும் கதை சொல்லியிருக்கிறார் எனவும் அவரின் இயக்கத்தில் அஜித் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. எனவே, அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், குட் பேட் அக்லி நிறுவனத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. வருகிற செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இன்றைய வலைப்பேச்சு யுடியூப் சேனலில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Next Story