ஒரு கேவலமான கதை இருக்குனு சொன்னேன்.! உடனே அந்த மனுஷன ஹீரோ ஆக்கிட்டாங்க.!

தமிழ் சினிமாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்க்கும்படியான அடல்ட் காமெடி திரைப்படம் வெளியாகி வருடங்கள் ஆகி இருந்த நேரம். அந்த சமயம் இதோ நான் கொண்டு வருகிறேன் ஒரு பக்கா அடல்ட் காமெடி திரைப்படத்தை இயக்கியவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன்.

அந்த படம் தான் திரிஷா இல்லனா நயன்தாரா. இந்த படம் வெளியான சமயத்தில் படத்தின் ஹீரோ ஜிவி. பிரகாஷ் அதற்கு முன்னர் ஒரு படம் மட்டுமே நடித்துள்ளார். இயக்குனருக்கு முதல் படம். ஆனால், படத்திற்கு கிடைத்த ஓப்பனிங் முன்னணி ஹீரோவுக்கு கிடைத்த ஓப்பனிங் ஆகும்.

இதையும் படியுங்களேன் - அந்த ஒரு குத்து பாட்டு என் வாழ்க்கையவே மாத்திடிச்சி.! வெங்கட் பிரபு நீங்களா இப்டி.?!

அந்தளவுக்கு கல்லூரி இளைஞர்கள் மத்தியில் இந்த படம் பிரபலமானது. இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பேட்டியில் கூறுகையில், நான் ஒரு நல்ல காதல் கதை வைத்துகொண்டு பலரிடம் வாய்ப்பு கேட்டு சென்றேன். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், அதன் பிறகு ரூட்டை மாற்றி , ஓர் குப்பை கதை இருக்கு கண்டிப்பா படம் ஹிட் ஆகும் என கூறினேன். உடனே ஓகே சொல்லிவிட்டார்கள். அப்படி உருவான திரைப்படம் தான் திரிஷா இல்லன நயன்தாரா. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, ஆதிக் , இரண்டாவது படத்தில் சிம்புவிடம் மாட்டிக்கொண்டு சிக்கி சின்னாபின்னமானது தான் மிச்சம்.

 

Related Articles

Next Story