Connect with us

Cinema News

ஓவர் குஷியில் இருக்கும் ஆதிக் ரவிசந்திரன்… மார்க் ஆண்டனி ஹிட்டுக்கு பின்னால் இருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ் இதானா?

Adhik Ravichandran: தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்கள் எல்லாம் பட்டையை கிளப்பி வரும் நிலையில், அந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்து இருப்பவர் தான் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன். ஆனால் அதற்கும் ஒரு முக்கிய காரணம் பின்னணியில் இருக்கிறதாம்.

சிம்புவை வைத்து ஏஏஏ என்ற படத்தினை இயக்கியவர் ஆதிக் ரவிசந்திரன். கிட்டத்தட்ட அடல்ட் ஒன்லி படமாக வெளிவந்த அந்த படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸே வரவில்லை. படமும் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதனால் படத்தினை இயக்கிய ஆதிக் கேரியர் காலி என்ற நினைப்பே கோலிவுட்டில் இருந்தது. ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்து விஷாலும், எ.ஜே.சூர்யாவும் மார்க் ஆண்டனிக்கு ஒப்புக்கொண்டனர்.

இதையும் படிங்க; இது அதுல்ல!.. போஸ்டர்களில் கோட்டை விட்ட லோகேஷ் கனகராஜ்!.. லியோ பரிதாபங்கள்!..

கிட்டத்தட்ட இந்த படமும் அப்படி தான் இருக்கும் என நினைத்த பலரின் எண்ணத்தினை தவிடுபொடியாக்கினார். படம் ஃபேமிலி ஆடியன்ஸால் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்க் ஆண்டனி வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் படத்தின் வருமானம் 100 கோடியை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் சக்ஸஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆதிக் இந்த வெற்றியை அஜித்துக்கு சமர்பிப்பதாக கூறினார். அவர் கஷ்டத்தில் இருந்த போது உன்னால் முடியும் என எனர்ஜி கொடுத்ததாகவும் கூறிப்பிட்டார். ஆனால் ஆதிக் ஒரு வெற்றி படம் மட்டும் கொடுத்து விடு.

இதையும் படிங்க: பாலிவுட்டே வேணாம்… யூ டர்ன் போட்ட டாப் இயக்குனர்… ஷாருக்கானுக்காக போட்ட ஸ்கெட்டில் சிக்கிய கோலிவுட் ப்ரின்ஸ்?

நம்ம இணைந்து படம் செய்யலாம் என்றும் அஜித் சொன்னதாக கூறப்படுகிறது. அதனால் தான் ஆதிக்கிற்கு இந்த வெற்றி மிகப்பெரிய சந்தோஷத்தினை கொடுத்து இருக்கிறது. இதனால் அஜித்தின் அடுத்த படங்களின் இயக்குனர் பட்டியலில் ஆதிக்கும் இணைந்து இருக்கிறார்.

ஆனால் விடாமுயற்சியே இன்னும் விடாமல் இருக்கிறது. சிறுத்தை சிவா ஒரு பக்கம் வெயிட்டிங்கில் இருக்க ஆதிக் அஜித்தின் அழைப்புக்கு காத்திருப்பதாகவும் சேதிகள் வலம் வருகிறது. விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதத்தில் தான் தொடங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top