ஆதிக்கை மொத்தமாக மாற்றிய அஜித்தின் வார்த்தை!.. இறங்கி அடிச்சி துவம்சம் பண்ணிட்டாரே!…

by சிவா |   ( Updated:2025-04-17 01:03:50  )
adhik
X

Good bad ugly: ஒருவர் வாழ்க்கையில் உயர நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம், உழைப்பதற்கு தயாராக இருந்தாலும் அதற்கான வாய்ப்பை ஒருவர் கொடுக்கவேண்டும். இல்லையேல் அந்த வாய்ப்பை நாமே உருவாக்க வேண்டும். நாம் துவளும்போது தூக்கிவிட ஒருவர் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ’உன்னால் முடியும்’ என்கிற நம்பிக்கையை கொடுக்கவாவது ஒருவர் இருக்க வேண்டும்.

திரையுலகை பொறுத்தவரை 95 சதவீதம் பேர் அப்படி நம்பிக்கையை கொடுக்கமாட்டார்கள். அதற்கு காரணம் போட்டி, பொறாமைகள், சுயநலம் போன்றவற்றை கொண்டதுதுதான் திரையுலகம். ஒருவரை வளர விடவே மாட்டார்கள். அப்படியே வளர்ந்தாலும் அவரை பற்றி தவறான கருத்துக்களை சொல்லி அவர் மீது ஒரு தவறான இமேஜை உருவாக்குவார்கள். ஏனெனில், சினிமா கோடிகளில் புரளும் ஒரு வியாபாரம். அப்படித்தான் பலரும் பார்ப்பார்கள்.

ஆனால், சினிமா துறையில் சிலர் மட்டுமே மற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, வாய்ப்பு கொடுத்து மேலே தூக்கி விடுவார்கள். அதில் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். இவர் பல அவமானங்களை தாண்டி சினிமாவில் ஜெயித்து காட்டியவர். கஷ்டப்பட்டு மேலே வந்தவர் என்பதால் திறமையிருந்தும் கஷ்டப்பட்டுபவர்களை மேலே தூக்கிவிடுவார். எஸ்.ஜே.சூர்யாவை அஜித் அப்படி நம்பியதால்தான் வாலி படம் உருவானது.

இப்போது நான் எல்லோருக்கும் தெரியும்படி மாறியிருக்கிறேன் எனில் அதற்கு காரணம் அஜித் சார்தான் என எஸ்.ஜே.சூர்யாவே சொல்லியிருக்கிறார். தற்போது குட் பேட் அக்லி படம் ஆதிக் ரவிச்சந்திரனை கவனிக்கத்தக்க இயக்குனராக மாற்றியிருக்கிறது. திரிஷா இல்லனா நயன்தாரா படம் ஹிட். அடுத்து சிம்புவை வைத்து இயக்கிய படம் ஓடவில்லை. அதன்பின் பிரபுதேவாவை வைத்து பகீரா என்கிற படம் எடுத்தார். அதுவும் ஓடவில்லை. பல வருடங்கள் கழித்து மார்க் ஆண்டனி எடுத்தார். அந்த படம் ஹிட் என்பதால் இப்போது குட் பேட் அக்லி சாத்தியமாகியிருக்கிறது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஆதிக் ‘நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும்போது 25 நாட்கள் அஜித் சாருடன் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது என் மொத்த சிந்தனையும் மாற்றிவிட்டது. ஏனெனில் ‘உங்கிட்ட நல்ல எனர்ஜி இருக்கு. இதுமாதிரி படங்களை பண்ணி வேஸ்ட் பண்ணாத. பெரிய படங்கள் பண்ணு.. உன்னால முடியும்’ என அஜித் சார் சொன்னார்.

அப்போதுதான் எனக்கு புரிந்தது. இனிமேல் ரொமான்ஸ், பிரேக்கப், காதல் தோல்வி விரக்தியில் ஹீரோ போன்ற கதையெல்லாம் செய்யக்கூடாது என முடிவெடுத்தேன். அப்படி உருவான படம்தான் மார்க் ஆண்டனி’ என ஆதிக் பேசியிருக்கிறார்.

Next Story