Ajith: ஏழு வருஷத்துக்கு முன்பே அஜித் சொன்ன வார்த்தை.. என்னய்யா சொல்றீங்க? தீர்க்கதரசியா இருப்பாரோ

by Rohini |   ( Updated:2025-04-10 09:20:19  )
Good
X

Good

Ajith: இப்போது பெரிய டிரெண்டிங்காக பேசப்படுவது குட் பேட் அக்லி படம் பற்றித்தான். விட்டதை பிடித்துவிட்டார் அஜித் என்றுதான் ரசிகர்கள் கோஷமிட்டு வருகின்றனர். இத்தனை வருடமாக எந்த மாதிரி அஜித்தை பார்க்க ஆசைப்பட்டோமோ அதை ஆதிக் காட்டி விட்டார் என்று அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விடாமுயற்சி.

அந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான ஜானர். ஃபேன்ஸ்களுக்கான படமே அது கிடையாது. எதையும் எதிர்பார்த்து வராதீர்கள் என்று மகிழ்திருமேனி முன்பே சொல்லிவிட்டார். சொன்ன மாதிரியே தான் படமும் இருந்தது. அதை அஜித் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் மற்ற ரசிகர்கள் படத்தை வச்சு செய்தார்கள். ஆனால் குட் பேட் அக்லி படத்தை பொறுத்தவரைக்கும் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படம்தான்.

குட் பேட் அக்லி பட டைட்டில் கீழே ஒரு சின்ன டேக் லைனும் சேர்த்திருக்கலாம். அதாவது அஜித் ரசிகர்களுக்காக ஒரு அஜித் ரசிகன் எடுத்த படம் என்று சேர்த்திருக்கலாம் என்று வலைப்பேச்சு பிஸ்மி கூட ஒரு பேட்டியில் கூறியிருந்தார். எப்படி பார்த்தாலும் படத்தை வச்சு கொண்டாடி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். வசூலு நினைத்ததை விட பெரிய அளவில் வர போகிறது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்திய ஒரு பேட்டியில் எப்படி இந்த கூட்டணி அமைந்தது என்பதை பற்றி கூறியிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு நேர்கொண்ட பார்வை படத்தில்தான் அஜித்தை சந்தித்திருக்கிறார் ஆதிக். அப்போது சுரேஷ் சந்திரா மற்றும் எச்.வினோத்திடம் இருந்து ஆதிக்கு கால் வந்ததாம். இந்த மாதிரி ஒரு கேரக்டர் இருக்கிறது. நீங்கதான் நடிக்க வேண்டும் என நேர்கொண்ட பார்வை படத்திற்காக கேட்டிருக்கிறார்கள்.

அந்த சமயத்தில்தான் இரண்டு படங்கள். அதுவும் தோல்வி படங்கள். ஒரு பெரிய மைனஸில் தான் இருந்திருக்கிறார் ஆதிக். சரி. அஜித்தை அதுவரை எப்பொழுது பார்ப்போம் என துடித்துக் கொண்டிருந்த நேரம். அவருடன் சேர்ந்தே படம் பண்ணும் வாய்ப்பு வந்தப் பொழுதுபயன்படுத்திக் கொண்டேன். தொடர்ந்து25 நாள்கள் அவருடன் பயணம் செய்தேன் என ஆதிக் கூறினார்.

அப்போது அஜித் ஆதிக்கிடம் ‘உன்கிட்ட நிறைய எனர்ஜி இருக்கிறது. வேறு மாதிரி படம் பண்ணலாமே’ என்றெல்லாம் நிறைய அறிவுரை கூறினாராம். அதோடு போனிகபூரிடம் ஆதிக்கை அறிமுகம் செய்து வைத்த அஜித் ‘இவர்தான் ஆதிக். இவர் நடிகர் இல்லை. இயக்குனர். என்னுடைய அடுத்த படத்தை இவர்தான் இயக்க போகிறார்’ என 2018லேயே சொன்னாராம் அஜித்.

இது ஆதிக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்ததாம். ஏனெனில் அந்த நேரத்தில் ஆதிக்கு என சொல்லும்படி ஃபிலிமோகிராபி எதுவும் இல்லை. ஜீரோ மைனஸாகத்தான் இருந்திருக்கிறார். இருந்தாலும் இதை பற்றி குட் பேட் அக்லி பட சூட்டிங்கில் ஆதிக் கேட்டாராம். எப்படி சார் அப்பவே என் மேல் நம்பிக்கை வைத்து அப்படி சொன்னீர்கள் என கேட்க ஒன்றுமே சொல்லாமல் அஜித் சிரித்துக் கொண்டே போய்விட்டாராம்.

Next Story