துபாய் ரேஸில் நடந்த ஒரு சிறப்பான சம்பவம்!.. அப்படி நடந்தது அதுதான் ஃபர்ஸ்ட் டைம்!.

Published On: April 15, 2025
| Posted By : சிவா
ajith car

நடிகர் அஜித்துக்கு நடிப்பது என்பது தொழில் மட்டுமே. பைக் மற்றும் கார் ரேஸில் கலந்துகொள்வது, ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர் இயக்குவது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொள்வது, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பைக்கை எடுத்துக்கொண்டு நீண்ட தூரம் பயணிப்பது, பைக்கில் உலகம் முழுவதும் சுற்றுவது என அவருக்கு பிடித்தமான விஷயங்கள் அவருக்கு நிறைய இருக்கிறது.

அஜித் எப்போதும் தன்னை ஒரு ஸ்டார் நடிகராக நினைத்ததே இல்லை. ‘நீங்கள் எப்படி ஒரு வேலை செய்கிறீர்களோ அப்படி நடிப்பது என்னுடைய வேலை. மற்றபடி உங்களை போலத்தான் நானும். ஸ்பெஷலாக ஒன்றுமில்லை’ என ஓப்பனாக சொல்வார் அஜித். ‘அதோடு, விஜய் வாழ்க.. அஜித் வாழ்க என சொல்லிக்கொண்டிருக்கும் நீங்கள் எப்போது நீங்கள் வாழப்போகிறீர்கள்?’ என கேட்ட ஒரே நடிகர் அஜித் மட்டுமே.

இப்போது ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் அஜித்தின் டீம் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் வரை அஜித் ரேஸ்களில் கலந்துகொள்ளவிருக்கிறார். அதன்பின்னரே அவர் அடுத்த படத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார். முன்பெல்லாம் பைக் ரேஸிலும் அஜித் கலந்து வந்தார். ஆனால், திருமணத்திற்கு பின் அவரின் மனைவி ஷாலினி அதை அனுமதிக்கவில்லை. பல வருடங்கள் கழித்துதான் இப்போது கார் ரேஸில் கலந்துகொண்டிருக்கிறார்.

தற்போது குட் பேட் அக்லி படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. இந்த படம் இதுவரை 150 கோடி வசூலை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில், அஜித் கலந்துகொண்ட துபாய் ரேஸ் தொடர்பான ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.

துபாயில் அஜித் சார் கலந்துகொண்ட முதல் ரேஸுக்கு நான் சென்றிருந்தேன். பொதுவாக அங்கு ரேஸ் ஸ்டேடியம் கட்டியது முதல் போட்டிகள் நடக்கும்போது அதைப்பார்க்க அதிகபட்சம் 30 பேர் வரை வருவார்களாம். ஒரு பிரபலமான ரேஸர் வந்தால் மட்டும் 40 பேர் வரை வருவார்கள். ஆனால், அஜித் சார் ரேஸில் கலந்துகொள்கிறார் என தெரிந்ததும் 25 ஆயிரம் பேர் வரை வந்துவிட்டார்கள். எனவே, என்ன செய்வது.. எப்படி சமாளிப்பது என்றே தெரியாமல் ரேஸை நடத்தியவர்கள் திக்குமுக்காடி விட்டார்கள்’ என பேசியிருக்கிறார்.

மேலும், அஜித் ரசிகர்களுக்கு இப்போது கார் ரேஸ் குறித்து ஒரு புரிதலும் ஆர்வமும் வந்திருக்கிறது. எனவே, அவர்களில் பலர் கார் ரேஸுக்கு வர வாய்ப்பிருக்கிறது’ என பேசியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.