"பொண்டாட்டியை விட இவங்களுக்குதான் அதிகமா ஐ லவ் யூ சொல்லியிருக்கேன்" - ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்!

by Giri |
பொண்டாட்டியை விட இவங்களுக்குதான் அதிகமா ஐ லவ் யூ சொல்லியிருக்கேன் - ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்!
X

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரூ.200 கோடி வசூலை நெருங்கி கொண்டிருக்கிறது. இதையடுத்து படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் படக்குழு பங்கேற்ற விழா சென்னையில் நடைபெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் மற்றும் பிரியா வாரியார் ஆகியோர் விழாவில் பங்கேற்று பேசினார்.

விழாவில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், "7வது படிக்கும் பையன் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டு கனவு கண்டு இன்றைக்கு இந்த இடத்தில் இருக்கிறேன். அஜித் சாருடைய ரசிகனாக இல்லாவிட்டால் நான் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை. 'Mark my words. This boy will do big' என்று அஜித் சார் போனி கபூர் சாரிடம் சொன்னார். எப்படி இப்படி சொன்னீர்கள் என்று அஜித் சாரிடம் ஷூட்டிங்கில் கேட்டேன். அவர் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு கடந்து சென்றார். ஸ்டாராக இல்லாமல் நடிகராக நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறார்.

என் மனைவி ஐஸ்வர்யாவைவிட உங்களுக்கு தான் அதிகமான ஐ லவ் யூ சொல்லியிருக்கிறேன். நான் ரொம்பவே ஹைப்பர் ஆக்டிவ். கடைசி ஒரு வருடம் எனக்கு ரொம்ப முக்கியமானது. இந்த ஒரு வருடம் அமைதியாக இருந்தேன். இந்த படத்தின் டைட்டில் அஜித் சார் சொன்னதுதான். இன்றைக்கு சார் கார் ரேஸில் பங்கேற்று இருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் சார் மூலமாகத்தான் நான் இயக்குநரானேன். ஜிவி இந்தப் படத்தை சவாலாக எடுத்துக் கொண்டு இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றிக்கு நான் ஒரு பகுதிதான். அஜித் சார்தான் முக்கியமான காரணம். ரிலீஸுக்குப் பிறகு அஜித் சார் கிட்ட பேசியபோது, வெற்றியை தலைக்கு எடுத்துக் கொள்ளாதீர்கள். தோல்வியை மனதில் கொண்டு போகாதீர்கள் என்று சொன்னார். போஸ்டர் ஒட்டிய ஒரு பையனால் இந்த விஷயம் சாதிக்க முடிந்தது என்றால் கண்டிப்பாக எல்லோராலும் எல்லா விஷயங்களும் செய்ய முடியும்." என்று தன்னம்பிக்கையுடன் முடித்தார்.

Next Story