எப்பா மொத்தமும் காப்பியா?!. சொந்த சரக்கே இல்லையா?!.. ஹாலிவுட்டிலிருந்து சுட்ட குட் பேக் அக்லி!..

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அஜித். இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அசர் பைசான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் நிதி நெருக்கடி காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அதோடு, அஜித்துக்கு சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால், அது மைனர் சர்ஜரிதான் என சொல்லப்பட்டதோடு, அவர் மகனுடன் நேரம் செலவழிக்கும் புகைப்படங்களும் வெளியானது.

இதையும் படிங்க: லைக்கா மீது அஜித்துக்கு கோவமா? ‘ஏகே 63’ பட போஸ்டர் வெளியிட்டதன் பின்னனி காரணம் இதுதானா?

ஒருபக்கம், நேற்று காலை திடீரென விடாமுயற்சி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரப்போவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி அஜித் ரசிகர்கள் அதை டிரெண்டிங் செய்தனர். ஆனால், விடாமுயற்சி தொடர்பான அப்டேட் எதுவும் வரவில்லை. மாறாக அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியானது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்திற்கு குட் பேட் அக்லி(Good Bad Ugly) என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு, தலைப்பு திருட்டு என்பது என பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. சில சமயம் அது சர்ச்சையாக மாறும். அதாவது சம்பந்தப்பட்டவர் இதுபற்றி புகார் கொடுத்தால் வெளியே தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி!.. அப்பவே இதுக்கு யாரு செட்டாவான்னு ஜோசியம் பார்த்த வெங்கட் பிரபு!.. எப்படி பாஸ்!..

ஆனால், தலைப்பை பொறுத்தவரை ரசிகர்களே சுலபமாக கண்டுபிடித்து விடுகிறார்கள். 1966ம் வருடம் கிளிண்ட் ஈஸ்வுட் நடிப்பில் வெளிவந்த படம்தான் The Good the bad and the ugly. இதிலிருந்து The-ஐ மட்டும் எடுத்துவிட்டு அஜித் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

good bad ugely

இதற்கெல்லாம் கிளின்ட் ஈஸ்வுட் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார் என நினைத்துவிட்டார்கள் போல. ஆனாலும், இதில் ஒன்றும் தவறு இல்லையே அந்த படம் வெளியாகி 67 வருடங்கள் ஆகிவிட்டது என அஜித் ரசிகர்கள் உருட்டி வருகிறார்கள். ஆனால், விஜய் ரசிகர்களை இதை வைத்தே இந்த படத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

 

Related Articles

Next Story