இது என்ன லுக்குனே தெரியலயே.. அஜித்தின் நியூ அவதார்.. புகைப்படத்தை பகிர்ந்த ஆதிக்

ajith_new1
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் அஜித். இப்போது அவருடைய நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. வரும் ஏப்ரல் பத்தாம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கின்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் இணைந்து அர்ஜுன் தாஸ், பிரசன்னா, தெலுங்கு நடிகர் சுனில் என பல முக்கிய பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். இவருடைய நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவு வித விதமான வேடங்களில் அஜித் தோன்றியிருக்கிறார்.
இதற்கு முன் நடித்த படங்களின் கெட்டப்கள் இந்த படத்தில் அஜித் போட்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இதுவும் எதிர்பார்ப்புக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. இந்த நிலையில் படத்தை பற்றிய ஒவ்வொரு அப்டேட்டும் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்க இன்று அஜித்தின் ஒரு புதிய லுக்கை ஆதிக் ரவிச்சந்திரன் அவருடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அஜித் என்றாலே சால்ட் அண்ட் பெப்பர் லுக் இதுதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இந்த ஒரு புதிய லுக்கில் முற்றிலுமாக தன் தலைமுடியை கருப்பு நிறமாக மாற்றி ஒரு புதிய ஹேண்ட்ஸ்சமான லுக்கில் தோன்றியிருக்கிறார் அஜித். கிரீடம் படத்தில் எப்படி இருந்தாரோ அந்த மாதிரி லுக்கில் இருக்கிறார் அஜித். இது சமூக வலைதளங்களில் மிகவும் டிரெண்டிங்காகி வருகிறது.
சமீபத்தில்தான் இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் அணி மூன்றாவது இடம் பிடித்து மீண்டும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. ஏற்கனவே துபாயில் மூன்றாவது இடத்தை பிடித்த அஜித்தின் அணி இந்த ரேஸிலும் தொடர்ந்து வெற்றிவாகை சூடியது.