Categories: Cinema News latest news

ராசியில்லாத அதிதி ஷங்கர்.?! சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பின்னணி இதோ..

பிரம்மாண்டம் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை வியக்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். தற்போது அவரது மகள் தனது க்யூட்டான பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அவருடைய முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஏராளமான ரசிகர்களை பெற்று விட்டார் அதிதி ஷங்கர்.

Also Read

அவர் நடித்த முதல் திரைப்படம் விருமன் திரைப்படம்  நாளை ரிலீஸ் ஆக உள்ளது. கார்த்தி நடித்துள்ள இந்த படத்தை, சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் ஒப்பந்தமானார்.  இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது

ஆனால் தற்போது நிதி பிரச்சனை காரணமாக மாவீரன் படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அதிதி நடித்த முதல் திரைப்படமான விருமன் திரைப்படத்திற்கு தற்போது கதை திருட்டு பஞ்சாயத்து எழுந்துள்ளது. ஆதலால் அந்த திரைப்படம் நாளை குறிப்பிட்டபடி வெளியாகும  என சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படியுங்களேன் – அடுத்தடுத்து மெகா ஹிட்.. ஆனாலும் மார்க்கெட் இல்லை.?! அனிருத்தின் சோக நிலைமை…

அடுத்தபடியாக மாவீரன் படத்திற்கு நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிதி சங்கர் சம்பந்தப்பட்ட இரண்டு திரைப்படங்களும் இப்படி ஆகிவிட்டதே, என்று அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் இப்படியே சென்றால், ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கி வைத்து விடுவார்களே என்ற பதட்டத்திலும் அதிதி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Published by
Manikandan