சத்தமில்லாமல் சப் இன்ஸ்பெக்டர் மாப்பிள்ளையை திருமணம் செய்த நடிகை...! யார் தெரியுமா?

by ராம் சுதன் |
adithya tv akalya
X

மக்களை சிரிக்க வைக்கும் விதமாக காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொலைக்காட்சி தான் ஆதித்யா தொலைக்காட்சி. இதில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் பிரபல தொகுப்பாளினி அகல்யா. இவர் நீங்க சொல்லுங்க டியூட் என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர தமிழ் சினிமாவில் தாராள பிரபு, தேவராட்டம், ராட்சசி, ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் அகல்யா நடித்துள்ளார். இந்நிலையில் மிகவும் எளிமையான முறையில் அகல்யாவிற்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

anchor akalya

தனது மீடியா நண்பர்கள் யாரையும் அழைக்காமல் அகல்யா மிகவும் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டதால் ஒருவேளை இது காதல் திருமணமாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாம்.

திருவண்ணாமலை கோவிலில் மிகவும் எளிமையாக நடந்த இவர்களது திருமணத்தில் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்று இருந்தனர். அகல்யாவின் கணவர் அருண் தமிழ்நாடு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vj akalya

திரைபிரபலங்களை திருமணத்திற்கு அழைக்க முடியாத காரணத்தால், சென்னையில் வரும் 8 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்களாம். அந்த நிகழ்ச்சியில் திரைத்துறையினர் பலரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story