சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல இயக்குனரின் மகள்.. அடித்தது யோகம்!
தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு இன்று யங் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவருக்கென தனியாக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது வெளியாகாவிட்டாலும்கூட இவரை காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
ஆனால், சினிமாத்துறையினர் மத்தியில் சிம்புவைப் பற்றி எப்போதும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அவர் எப்போதும் படப்பிடிப்பில் சரியாக கலந்துகொள்ள மாட்டார், குறித்த நேரத்திற்குள் படத்தை முடித்து தரமாட்டார். படப்பிடிப்புக்கே வராமல் தயாரிப்பாளருக்கு கஷ்டத்தை கொடுப்பார் என்றெல்லாம் பேச்சு உண்டு.
ஆனால், தான் அப்படியெல்லாம் இல்லை என சிம்புவும் கூறியுள்ளார். இதை உடைத்தெறிவதுபோல் சமீப காலமாக தான் நடிக்கும் படங்களை விரைந்து முடித்து வருகிறார் சிம்பு. சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சிம்புவின் கேரியரில் வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் கொரோனா குமார் படத்தை கோகுல் இயக்கி வருகிறார். இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
பொதுவாக இவரது படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதால் இந்தப்படமும் காமெடி கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வந்துள்ளது.