அதிதி ராவ் எத்தனை நாள் அலையவிட்டார்… மேடையில் ஓபனாக சொன்ன சித்தார்த்…

by Akhilan |
அதிதி ராவ் எத்தனை நாள்  அலையவிட்டார்… மேடையில் ஓபனாக சொன்ன சித்தார்த்…
X

Aditi Rao: நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவருக்கும் நிச்சயம் நடந்து இருக்கும் நிலையில் அவர்கள் காதல் குறித்தும் திருமணம் குறித்தும் சித்தார்த் சில விஷயங்களை சொல்லி இருப்பது வைரலாகி வருகிறது.

சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். முன்னா கேரக்டரில் அவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ச்சியாக வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. முன்னணி நடிகராக இல்லை என்றாலும் அவருக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

இதையும் படிங்க: கண்ணதாசனுக்கு வந்த காதல்!.. பாடல் வரிகளில் இறக்கிய கவிஞர்!.. அட அந்தப் பாடலா?..

சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக அவருக்கு கடந்த வருடத்தின் சிறந்த என்டர்டைனர் என்ற விருது கொடுக்கப்பட்டுள்ளது. அவ்விருது விழாவில் பேசிய சித்தார்த், ரகசியம் மற்றும் தனிமைக்கு சிலருக்கு வித்தியாசம் தெரியவில்லை. ரகசியம் என்பது யாருக்குமே தெரியாமல் செய்வது.

தனிமை என்பது எனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் சொல்லி செய்வது. அப்படி எனக்கு நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்து எங்களுடைய நிச்சயம் நடந்தது. விரைவில் திருமண தேதியை எங்களுடைய பெற்றோர்கள் முடிவு செய்யும்போது கண்டிப்பாக வெளியில் அறிவிப்பேன். அது ஷூட்டிங் டேட்டா நானா சொல்ல முடியாது. மேலும் அதித்தி என்னை எத்தனை நாட்கள் காத்திருக்க வைத்தார் என்பது கணக்கே இல்லை.

இதையும் படிங்க: அந்த ஹீரோவை ரவுடியை வச்சு தூக்கிட்டு வந்த இயக்குனர்… விவேக்கே ஜெயிலுனு சொன்னது இவரை தானாம்!…

Next Story