அஜித் 61ல் ஹீரோயின் யார் தெரியுமா? – அட அவங்க செம க்யூட் ஆச்சே!…

Published on: February 10, 2022
ajith
---Advertisement---

அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. கடந்த பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது பிப்ரவரி 24ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

ஒருபக்கம் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் அஜித். இப்படத்தையும் ஹெச்.வினோத் இயக்க போனிகபூரே தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்கவுள்ளது.

aditi rao

இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடிக்கவுள்ளார். இவர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடிக்க துவங்கியவர். பின்னர் செக்க சிவந்த வானம், சைக்கோ ஆகிய படங்களில் நடித்தார். செம அழகாக இருப்பார் என்பதால் அவருக்கும் அஜித்துக்கும் ஜோடி பொருத்தம் சரியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Leave a Comment