திரைபிரபலங்களை ஒட்டகம் என குறிப்பிட்ட நடிகை.... ஆனா அதை அவங்க சமாளிச்சதுதான் ஹைலைட்டு
பிரான்ஸில் கோலாகலமாக நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவை சேர்ந்த திரைபிரபலங்கள் பலய் பங்கேற்றனர். அந்த வகையில் பிரபல நடிகை அதிதி ராவும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான நடிகை அதிதி ராவ் இறுதியாக வெளியான ஹே சினாமிகா படம் வரை மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது தமிழில் காந்தி டாக்கீஸ், ஜூபிளி உள்ளிட்ட படங்களில் அதிதி ராவ் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, "நான் ரொம்பவே சின்னப் பொண்ணு. இப்படியொரு சர்வதேச திரைப்பட விழாவில் என்னை கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.
கேன்ஸ் திரைப்பட விழாவில் எப்படி கலந்து கொள்ள வேண்டும், எப்படி ரெட் கார்ப்பெட்டில் நடக்க வேண்டும் என்பது போன்ற எந்தவொரு ஐடியாவும் எனக்கு இல்லை. நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.
இங்கே ஏகப்பட்ட ஒட்டகங்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவே நான் ஒரு சின்ன பூச்சியாத்தான் தெரிவேன்" என கூறியுள்ளார். இந்நிலையில் உடனடியாக சுதாரித்த அதிதி, "நான் தவறான அர்த்தத்தில் அப்படி சொல்லவில்லை. இங்கே இருக்கும் பிரபலங்கள் எல்லாம் என்னை விட பல மடங்கு உயர்ந்தவர்கள். அதை குறிக்கவே அப்படி சொன்னேன்" என சட்டென்று சமாளித்து விட்டார்.