நடிகர் கார்த்தி நடிப்பில் கூடிய சீக்கிரம் திரைக்கு வரவிருக்கும் படம் விருமன். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்க சூர்யா சொந்த தயாரிப்பான 2டி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியான இயக்குனர் சங்கர் மகள் அதீதி சங்கர் நடிக்கிறார். அண்மையில் தான் டாக்டர் படிப்பை முடித்து சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். சினிமா மீதான ஆர்வத்தால் அப்பாவின் ஆசையையும் மீற முடியாமல் படிப்பை முதலில் முடித்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

பார்ப்பதற்கு குறும்புத்தனமான பெண்ணாக இருக்கும் அதீதி சங்கர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடியாகும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். மேலும் முக்கியமான செய்தி என்னவெனில் சிவகார்த்திகேயனின் படத்திற்கு அதீதிக்கு சம்பளம் 25 லட்சமாம்.

இன்னும் ஒரு படம் ரிலீஸ் ஆக வில்லை. அதுக்குள்ள இவ்ளோ பெரிய சம்பளமா என சினிமா சம்பந்தப் பட்ட பிரபலங்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். இன்னும் சிலர் இவரின் இந்த சம்பளத்தை கேட்டு இது அதீதிக்கு உரிய சம்பளமாக தெரியவில்லை. சங்கருக்கு உரிய சம்பளமாக தான் தெரிகிறது என்றும் கூறிவருகின்றனர்.
