கார்த்தி பட ஹீரோயினை தட்டி தூக்கிய சூர்யா!.. அடுத்த படத்துல அவங்கதான் ஹீரோயினாம்!..

நடிகர் சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்களை இயக்கிய சிவா இப்படத்தை இயக்கி வருகிறார். சூர்யாவின் நடிப்பில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக அதிக பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படம் முடிந்த பின் சுதா கொங்கராவுடன் மீண்டும் சூர்யா இணையவுள்ளார். இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் இயக்குனராக ரசிகர்களிடம் பிரபலமானார். மாதவன் நடிப்பில் உருவான இப்படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு, தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதையும் சுதா நிரூபித்திருந்தார்.

இதையும் படிங்க: லோகேஷ் கையிலெடுக்கும் ரோலக்ஸ்!.. வெறித்தனமா களமிறங்கும் சூர்யா!.. பரபர அப்டேட்!…

அடுத்து சூர்யாவை வைத்து இவர் இயக்கிய திரைப்படம்தான் சூரரைப்போற்று. இப்படத்தில் சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். விமர்சகர்களாலும் இப்படம் கொண்டாடப்பட்டது. மேலும், பல உலக திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டது.

இப்போது இப்படம் ஹிந்தியிலும் உருவாகி வருகிறது. இப்படத்தில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், கங்குவா படத்திற்கு பின் சூர்யா நடிக்கவுள்ள படத்தையும் சுதா கொங்கராவே இயக்கவுள்ளார். சூரரைப்போற்று போல இப்படமும் ஒரு தனி மனிதனின் பயோகிராபி என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: தொடர் மாஸ் ஹிட் படங்களுக்கு தயாராகும் உச்ச நட்சத்திரங்கள்.. சூர்யா போடும் மாஸ்டர் ப்ளான்!..

இந்நிலையில், இப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். இவர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் நடிக்க துவங்கினார். மருத்துவம் படித்துவிட்டு டாக்டராகாமல் சினிமாவுக்கு வந்தவர் இவர். விருமன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்திலும் நடித்திருந்தார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சூரரைப்போற்று படத்தில் மலையாள நடிகை அபர்ணா கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவருக்கான கதாபாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே, அடுத்த அப்டத்தில் அதிதிக்கும் சிறப்பான வேடம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: லட்சியத்தை அடைய வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கும் எஸ்.ஜே.சூர்யா! ஏன் அவருக்கு திருமணம் ஆகலனு தெரியுமா?

 

Related Articles

Next Story