விஜய்க்கு ஹீரோயினாக ரெடியாகிட்டாரா அதிதி ஷங்கர்!.. காருக்குள்ள இந்த குத்து குத்துறாரே!..

இயக்குநர் ஷங்கரின் மகளும் கோலிவுட்டின் இளம் நடிகையுமான அதிதி ஷங்கர் தனது சொகுசு காரில் விஜய்யின் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “நா ரெடி” பாடலுக்கு பாட்டுப் பாடி காருக்குள்ளே குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

நடிகர் கார்த்திக்கு ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா மந்தனா விஜய்யின் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் தளபதி 68ல் ஜோடியாக போவதாக பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க: ஆதிபுருஷுக்கு ஆனது மாதிரி நடந்துட்டா என்ன பண்றது!.. சலார் படத்திற்காக பிரபாஸ் எடுக்கும் பெரிய ரிஸ்க்!..

இந்நிலையில், கார்த்தியுடன் விருமன், சிவகார்த்திகேயன் உடன் மாவீரன் படங்களில் நடித்த அதிதி ஷங்கர் அடுத்து விஜய்க்கு ஜோடியாக இப்படியொரு பெரிய பிட்டை போட்டு வருகிறாரா என நெட்டிசன்கள் இந்த புதிய வீடியோவை பார்த்து கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் விஜய் நடிக்கும் போதே அவருடைய தீவிர ரசிகையான அதிதி ஷங்கர் அடுத்து லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் வைப்பில் தற்போது மூழ்கியிருப்பதையே வெளிப்படுத்தி உள்ளார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்த கிரணா மாறிட்டாரா அமலா பால்!.. கோவாவில் குடியும் குடித்தனமுமாக இவரும் செட்டில் ஆகிடுவாரு போல!..

அனிருத் இசையில் அசல் கோலார் ராப் செய்த “நா ரெடி தான் வரவா” பாடலை காரில் செம சத்தமாக போட்டு கேட்டுக் கொண்டே கை, கால்களை அசைத்தபடி நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் சன் டேவை ஹேப்பி சன் டேவாக மாற்றி விட்டார் அதிதி ஷங்கர்.

மாவீரன் படத்திற்கு பிறகு அதிதி ஷங்கர் அடுத்ததாக அதர்வாவின் தம்பிக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதுவரை அதிதி ஷங்கர் அதிகாரப்பூர்வமாக எதையுமே அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளீக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/CwvBUT4y_nI/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

 

Related Articles

Next Story