சினிமாவில் நுழைந்த வாரிசு நடிகைகளில் அதிதி ஷங்கரும் ஒருவர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் ஆசை மகள் இவர். மகளை எப்படியாவது டாக்டராக்கி பார்க்க வேண்டும் என ஷங்கர் ஆசைப்பட்டார்.

அப்பா ஆசைப்படியே எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு மருத்துவராகமல் ‘எனக்கு நடிப்பதில்தான் ஆர்வம்’ என அடம்பிடித்து சினிமாவுக்கு வந்துவிட்டார் அதிதி.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான விருமன் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘கஞ்சாப்பூ கன்ணால’ பாடல் இப்போதும் அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாடலாக இருக்கிறது.

விருமன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளியானால் அதிக படங்களில் நடிக்க துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளரும் இளம் நடிகையாக மாறியுள்ள அதிதி மற்ற நடிகைகளை போலவே விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கொஞ்சம் கவர்ச்சியான உடையில் பால் மேனியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

