வாவ்!..தாவணி பாவாடையில் சும்மா தூக்குது!...வசியம் செய்யும் அதிதி ஷங்கர்....
சினிமாதுறையில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை. சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அவர்கள் விரும்பியே தங்கள் வாரிசுகளை சினிமாவில் களமிறக்குவார்கள்.
ஆனால், சில வாரிசுகள் பெற்றோர்களுக்கு விருப்பமே இல்லாமல் சினிமாவுக்கு வருவார்கள். நடிகர் விஜய் கூட அடம்பிடித்துதான் சினிமாவுக்கு வந்தார். தற்போது அதிதி ஷங்கரும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் இவர். இவரை மருத்துவராக்க வேண்டும் என நினைத்து எம்.பி.பி.எஸ் படிக்க வைத்தார் ஷங்கர்.
ஆனால், நடிக்கவே ஆசை எனக்கூறி விருமன் திரைப்படம் மூலம் நடிகையாகி விட்டார் அதிதி. முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். ரசிகர்களுக்கும் இவரை பிடித்துள்ளது.
அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்திலும் அதிதி நடிக்கவுள்ளார். மேலும், எப்படியாவது மார்க்கெட்டை பிடிப்பதற்காக அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பாவாடை தாவணியில் அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.