பாவாடை தாவணியில் மனசை கெடுக்கும் அதிதி ஷங்கர்!.. பாத்து பாத்து ஏங்கும் ரசிகர்கள்...
தமிழில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கரின் மகள்தான் அதிதி ஷங்கர். இவரை மருத்துவராக்கும் ஆசையில் எம்.பி.பி.எஸ் படிக்க வைத்தார் ஷங்கர். ஆனால், படித்துமுடித்த பின் நான் நடிகையாகத்தான் இருப்பேன் என சொல்லி, அப்பாவிடம் அடம்பிடித்து சினிமாவில் நுழைந்துவிட்டார்.
ஷங்கரின் மகள் என்பதால் வாய்ப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை. முதல் படத்திலேயே கார்த்தியுடன் ஜோடி போட்டு நடித்தார். முத்தையா இயக்கத்தில் வெளியான இந்த விருமன் திரைப்படம் சுமாராக ஓடியது. அதிதி ஷங்கர் ஒரு பாடகியும் கூட. இவர் முதலில் பாடியது ஒரு தெலுங்கு படத்தில்தான்.
விருமன் படத்தில் வரும் மதுரை வீரன் பாடலை பாடியது இவர்தான். விருமன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்திலும் நடித்திருந்தார். விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக வந்தவர், மாவீரன் படத்தில் நகரத்து பெண்ணாக சிறப்பாகவே நடித்திருந்தார்.
ஒருபக்கம், அசத்தலான உடைகளில் அழகை காட்டி அதிதி வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. எனவே, அவரும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலயில், பாவாடை தாவணியில் க்யூட்டாக போஸ் கொடுத்து அதிதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை பெற்று வருகிறது.