Entertainment News
சுத்தமா நடிக்கவே வரல!.. படிச்ச படிப்புக்கேத்த வேலையை பார்க்க கிளம்பிட்டாரா ஷங்கர் பொண்ணு?..
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் சுமாராக ஓடிய நிலையில், அடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் இந்த ஆண்டு நடித்திருந்தார்.
மாவீரன் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதிதி ஷங்கர் அந்த படத்தில் எளிமையான கதாபாத்திரத்தில் அலட்டிக் கொள்ளாமல் கொடுத்த வேடத்தை கச்சிதமாக ஏற்று நடித்திருந்தார்.
இதையும் படிங்க: சாதாரணமாக கேட்ட சிவாஜி!.. அவமானமாக எடுத்துக்கொண்ட எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!..
படத்தில் அதிதி ஷங்கரை விட சிவகார்த்திகேயனை சைட் அடித்தவர்கள் தான் அதிகம் இருந்தனர். மேலும், சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்த குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா பிளெஸ்ஸியே ஹீரோயினை விட சிறப்பாக நடித்திருந்தார் போன்ற கமெண்ட்டுகளும் குவிந்தன.
ஹீரோக்களை போல வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே பார்த்து பார்த்து நடித்து வரும் அதிதி ஷங்கர் மாவீரன் படத்திற்கு பிறகு இன்னும் அடுத்த படத்தை கமிட் செய்யவே இல்லையே என காத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென தற்போது புதிய புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: என்னா உடம்புடா!. இதுவே 10 நாளைக்கு தாங்கும்!.. இளசுகளை ஏங்க வைக்கும் ரித்திகா சிங்!..
இயக்குநர் ஷங்கரின் விருப்பத்திற்கேற்ப மருத்துவம் படித்த அதிதி ஷங்கர் டாக்டராக பணிபுரிவார் என எதிர்பார்த்த அப்பாவுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக நடிக்கப் போகிறேன் என ஒற்றைக் காலில் நின்று ஹீரோயினாகவும் ஆகி விட்டார். இந்நிலையில், திடீரென டாக்டர் கெட்டப்பில் மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்களை அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ளார்.
உண்மையாகவே டாக்டராக ஆகிவிட்டாரா? இல்லை அடுத்த படத்திற்கான கெட்டப்பா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.