கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!.. ஆடையை குறைத்து அதிர வைக்கும் அதிதி ஷங்கர்...
திரையுலகம் என்றாலே வாரிசுகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படி வாரிசு நடிகையாக களம் இறங்கியிருப்பவர்தான் அதிதி ஷங்கர். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் ஷங்கரின் மகள் இவர்.
இவரை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு மருத்துவம் படிக்க வைத்தார் ஷங்கர். ஆனால், நான் நடிகையாகத்தான் இருப்பேன் எனக்கூறி சினிமாவுக்கு வந்துவிட்டார் அதிதி.
முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்த படம் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் அதிதியை எல்லோருக்கும் பிடித்திருந்தது.
சினிமா விழாக்களில் கடி ஜோக் சொல்லி ரசிகர்களை சிரிக்க வைத்தார். விருமனுக்கு பின் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இப்போதுவரை உலகம் முழுவதும் ரூ.75 கோடி வரை வசூல் செய்துவிட்டது. எனவே, திரைத்துறையில் அதிதிக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என கணிக்கப்படுகிறது.
தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தால் கண்டிப்பாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
எப்படியாவது ரசிகர்களை கவரவும், வாய்ப்புகளை பெறுவதற்காகவும் அழகான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் அழகை காட்டி அதிதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.