சினிமாவுல வளரனுமா அட்ஜெஸ்மென்ட்க்கு ஒத்துக்கோ!.. கீழ்த்தரமாக பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன்!..
சினிமாவில் நடிகைகளை அட்ஜெஸ்மென்டுக்கு அழைக்கும் பொருட்டு பேசி சர்ச்சையில் மாட்டிருக்கிறார் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன். ஏற்கெனவே பல மேடைகளில் நடிகர்கள் முதல் அனைவரையும் விலாசி தாக்கி வரும் கே. ராஜன் சமீபகாலமாக சர்ச்சையான பேச்சுக்களை உதிர்த்து வருகிறார்.
அந்த வகையில் பெரும்பாலான நடிகைகள் அட்ஜெஸ்மெண்ட் செய்தால் தான் சினிமாவிற்குள் வரமுடியுமா? இந்த நிலையை தயாரிப்பாளரான நீங்கள் மாற்ற வழி இருக்கா? என கேட்க அதற்கு பதிலளித்த கே. ராஜன், ‘முடியவெ முடியாது. அந்த கரைக்கு போகவேண்டுமென்றால் நடுவில் சேரு இருந்தால் அந்த சேரை மிதித்து தான் போக வேண்டும்.அதே போல் தான் நீ பெரிய ஆளாக சினிமாவில் வளரவேண்டும் என்றால் அட்ஜெஸ்மெண்ட்க்கு ஒத்துக்கத்தான் வேண்டும்’ என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : அலைபாயுதே படம் இந்த நடிகரின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமா?.. ரகசியமாக கசிந்த தகவல்!..
மேலும் அவர் கூறும்போது ‘ என்ன திறமை இருந்தாலும் அதற்கெல்லாம் இங்கு மதிப்பு இல்லை. அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டால் சம்மதிக்க தான் வேண்டும், மேலும் சில நடிகைகள் கராறாக இருக்கிறார்கள் அதுவும் தமிழ் நடிகைகள் ஒரு சில பேர் ஸ்டிர்க்டாக இருக்கிறார்கள், வட மாநிலத்தில் இருந்து வரும் நடிகைகள் இதற்கு சம்மதித்து தானே வருகிறார்கள்’ என்று கூறினார்.
மேலும் தயாரிப்பாளர்கள் எல்லாம் பாவம், அனுபவிக்கிறது ஒன்று நடிகர்களாக இருப்பார்கள் இல்லையென்றால் இயக்குனர்களாக இருப்பார்கள் என்று கூடவே தன்னுடைய ஆதங்கத்தையும் சேர்த்து தெரிவித்தார் கே.ராஜன்.