எம்எஸ்வி-யே திருப்பி அனுப்பிய பாட்டை சூப்பர் ஹிட் ஆக்கிய இசைப்புயல் - வைரமுத்து பகிர்ந்த சீக்ரெட்

AR Rahman: உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இசையமைப்பாளர் என்றால் அது இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்தான். இளையராஜாவிடம் கீ போர்ட் வாசித்துக் கொண்டிருந்த ரஹ்மான் ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மணிரத்தினத்தால் அறிமுகம் செய்யப்பட்டவர் ரஹ்மான். முதல் படத்திலேயே தன்னுடைய இலக்கை அடைந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ரோஜா படத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களும் எக்காலத்தும் நிலைத்து நிற்கும் படியாக அமைந்து விட்டன.

இதையும் படிங்க: அடுத்த வருஷம் ராகவா லாரன்ஸுக்கு செம ட்ரீட் தான் போலயே.. எல்லாமே மாஸ் டைரக்டர்கள்..!

ஒவ்வொரு பாடலும் காதில் தேன் வந்து பாய்வது போல் இன்றைய கால இளம் தலைமுறையினர் கூட ரசித்து வருகின்றனர். ரோஜா படம் மட்டுமில்லாமல் ஆரம்பகாலங்களில் ரஹ்மான் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ஒரு தனித்துவம் பெற்றவையாக இருந்தன.

ரோஜா படம் மாதிரியே பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படம் சுரேஷ் மேனன் மற்றும் ரேவதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ‘புதிய முகம்’ திரைப்படம். அந்தப் படத்தில் குறிப்பாக ‘கண்ணுக்கு மை அழகு’ என்ற பாடலை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

இதையும் படிங்க: கணேஷ் விஷயத்தை குடும்பத்துக்கிட்ட சொன்னா எழில் கடுப்பாகிடுவாரோ..! பாக்கியாவுக்கு அடுத்த சவால்..!

அந்தப் பாடலுக்கு வரி எழுதியவர் கவிஞர் வைரமுத்து. ஆனால் அந்த வரியை எழுதி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் தனக்குள்ளேயே வைத்திருந்தாராம் வைரமுத்து. முதலில் எம்.எஸ்.வியிடம் போய் காட்டியிருக்கிறார். ஆனால் அவருக்கு பிடிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டதாம்.

அதன் பிறகு ஷங்கர் கணேஷிடம் கொண்டு போயிருக்கிறார். அவரிடம் இருந்து திரும்பி வந்துவிட்டதாம். அதன் பிறகு ஷியாம் என பல முன்னணி இசையமைப்பாளர்களிடமும் போய் காட்டியிருக்கிறார். யாருக்குமே அந்த பாட்டு பிடிக்கவில்லையாம்.

இதையும் படிங்க: இதை செய்ய இவர் யாரு?!.. பலத்த எதிர்ப்புக்கு நச்சுன்னு பதில் சொன்ன மாரி செல்வராஜ்!..

அதன் பிறகு சுரேஷ் மேனன் ‘புதிய முகம் என்ற படத்தை எடுக்கிறோம். உடனடியாக ஒரு பாடல் வேண்டும்’ என சொல்ல தன்னிடம் இருந்த கண்ணுக்கு மை அழகு என்ற பாடல் வரியை கொடுத்திருக்கிறார். சரியாக 10 நிமிடங்களில் ஏஆர் ரஹ்மான் போட்டு கொடுத்து ஹிட்டான பாடல்தான் இந்த கண்ணுக்கு மை அழகு பாடல்.

 

Related Articles

Next Story