Connect with us

24 வருஷம் கழிச்சி மீண்டும் இறங்கி அடிக்கும் ஆண்டவர்.. செம ட்ரீட் இருக்கு…

Cinema History

24 வருஷம் கழிச்சி மீண்டும் இறங்கி அடிக்கும் ஆண்டவர்.. செம ட்ரீட் இருக்கு…

தற்போதைய தமிழ் சினிமாவின் மிக பெரிய நம்பிக்கை என்றால் அது விக்ரம் திரைப்படம் தான். கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலே தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள திரைப்படம் விக்ரம். ஜூன் 3ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தை தமிழகம் முழுவது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்திற்க்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தில் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

இதற்கு ஒரு முன்னோட்டமாக இன்று விக்ரம் படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை கமல்ஹாசன் எழுதி அவரே பாடியுள்ளாராம். இந்த பாடல் வழக்கம் போல கமல் ஸ்ருதி விலகாமல் ஓர் கிளாசிக் பாடல் போல அனிருத் இசையில் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஓர் சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்களேன் – ரஜினி மூலம் நெல்சனை பழிவாங்க காத்திருக்கும் விஜய்.! பின்னணியில் பக்கா பிளான்..,

ஆம், கிட்டத்தட்ட 24 வருடங்கள் கழித்து முழுநீள குத்து பாடலாக இது இருக்கும் என கூறப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வெளியான காதலா காதலா படத்தில் கமல், ‘காசு மேல காசு வந்து’ எனும் குத்து பாடலை தான் தனது குரலில் இறங்கி பாடியிருப்பார்.

அதன் பிறகு விருமாண்டி, வசூலிராஜாவில் பாடினாலும், அந்த பாடல் அளவுக்கு இறங்கி ஆட்டம் போட வைத்த பாடல் இன்னும் வரவில்லை என்றே கூறலாம் . அந்த குறையை தீர்க்க இன்று மாலை விக்ரம் படத்தில் இருந்து ‘பத்தல பத்தல’ பாடல் அனிருத் இசையில் இருக்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top