அஜித்தை தொடர்ந்து!.. பிரதீப் ரங்கநாதனை ஓடவிட ரெடியான சூர்யா!.. குழி பறிக்கும் வடிவேலு?..

by Saranya M |
பிரதீப்
X

இந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் திரையரங்குகளில் வேற லெவல் வசூலை அள்ளிய நிலையில் சூர்யாவின் கங்குவா படத்தின் வசூலை விட அதிகம் என்றும் மீண்டும் சூர்யாவை பிரதீப் ரங்கநாதன் தோற்கடித்து விட்டார் என்றும் கிண்டல் செய்யப்பட்டது.

மேலும், அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தையும் வசூலில் பிரதீப் ரங்கநாதன் ஓட விட்டார் என்றும் டிராகனை திடீரென விஜய் ரசிகர்கள் பாராட்ட ஆரம்பித்தனர். ஆனால், உடனடியாக ரெட் டிராகனாக மாறிய அஜித் குமார் 250 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி தனது கெத்தை நிரூபித்து விட்டார்.

அடுத்ததாக சூர்யா மே ஒன்றாம் தேதி ரெட்ரோ படத்தின் மூலமாக பிரதீப் ரங்கநாதனை மீண்டும் ஓட விடுவார் என்றும் அஜித்குமாரின் குட் பேட் அட்லி படம் அளவுக்கு வசூல் ஈட்டுமா என்பது படத்தின் ரிசல்ட்டை பொறுத்து தான் என்றாலும் டிராகன் படத்தை ரெட் டிராகனை தொடர்ந்து ரெட்ரோவும் கதற காத்திருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால், சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு, சுந்தர் சி, வாணி போஜன், கேத்தரின் தெரேசா நடித்த கேங்ஸ்டர் திரைப்படம் இந்த வாரமும் அதிக அளவிலான தியேட்டர்களை ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் அதன் காரணமாக ரெட்ரோ படத்திற்கு வர வேண்டிய பெரிய கலெக்ஷன் குறைய வாய்ப்புகள் அதிகம் என்னும் கூறுகின்றனர்.

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகவுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், ரெட்ரோ திரைப்படம் டிராகன் பட வசூலை முறியடிக்குமா? குட் பேட் அக்லி பட வசூலை முந்துமா என்கிற கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Next Story