Cinema News
A சர்டிபிகேட்தான் இப்போ டிரெண்டே!.. அனிமலை தொடர்ந்து பிரபாஸ் படத்துக்கும் அதேதானாம்!..
முன்னணி நடிகர்கள் எப்படியாவது தங்கள் யு சான்றிதழ் அல்லது யு/ஏ சான்றிதழையாவது வாங்கிவிட போராடுவார்கள். மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தால் தான் கல்லா கட்டும் என்கிற நிலை, இன்னமும் தமிழ் சினிமாவில் உள்ளது.
ஜெயிலர் மற்றும் லியோ படங்களில் அதிக வன்முறை காட்சிகள் இருந்த நிலையிலும், அந்த படங்களுக்கு யு/ஏ சான்றிதழே வாங்கப்பட்டன. ஆனால், பாலிவுட் மற்றும் டோலிவுட் எல்லாம் அந்த ஸ்டீரியோடைப்புகளை உடைத்தெறிந்து விட்டு வசூல் வேட்டை ஆடத் தொடங்கி உள்ளன.
இதையும் படிங்க: நிச்சயம் முடிந்த பெண்ணிடம் ஏடாகூடமா பேசிய சந்திரபாபு… மானத்தை வாங்கிய பெண்ணின் தந்தை…
சமீபத்தில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் ஏ சான்றிதழ் என்றும் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்றும் சொல்லப்பட்டாலும் தியேட்டரில் ரசிகர்கள் வெள்ளம் போல வந்து இதுவரை 600 கோடி வசூலை தாண்டி அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்து ஜெயிலர் மற்றும் லியோ வசூலை ஒரே வாரத்தில் தாண்டி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படம் வரும் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், அந்த படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சலார் முதல் பாகம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் வரை ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஆஸ்த்தான இயக்குனர்? அப்போ வெற்றிமாறன்