Rajini: கலைஞரால் செய்ய முடியல! முடிச்சு காட்டிய ஜெயலலிதா.. ரஜினி தைரியலட்சுமினு சொன்னது சரிதான்

Published On: December 12, 2025
jaya
---Advertisement---

இன்று ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான நாள். ரஜினியின் 75வது பிறந்த நாள். தனது பிறந்த நாளை ரஜினி ஜெயிலர் 2 செட்டில் கொண்டாடியிருக்கிறார். ரஜினி வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்து விட்டனர். இந்த நிலையில் ரஜினியின் பிறந்த நாள் என்பதால் ரஜினி பற்றிய பல நினைவலைகள் இன்று சோசியல் மீடியாவில் ஆக்கிரமித்து வருகின்றன.

அந்த வகையில் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு சம்பவத்தை வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். ஆரம்பத்தில் ஜெயலலிதாவை மறைமுகமாக எதிர்த்தவர் ரஜினி. ஆனால் இதே ரஜினி தான் ஒரு மேடையில் ஜெயலலிதாவை தைரியலட்சுமி என புகழாரம் செய்திருப்பார். அதற்கு காரணம் என்ன என்பதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். ஒரு முன்னணி தொலைக்காட்சி நிறுவனம்,

அந்த நிறுவனத்தில் ஒரு உயரதிகாரி. அவர் யாருக்குமே பயப்படமாட்டாராம். அன்றைய சூழலில் கலைஞர் ஆட்சிதான் நடந்திருக்கிறது. அப்போது கலைஞரை எதிர்த்து நிறைய விஷயங்களை அந்த அதிகாரி பேசியிருக்கிறார். இதை கலைஞரிடம் ‘ நமக்கே தண்ணி காட்டி வருகிறார் அந்த அதிகாரி’ என சொல்ல, அதற்கு கலைஞர் ‘விடு. யார் சொல்லியும் அவர் கேட்கப் போவதில்லை’ என கலைஞர் விட்டுவிட்டாராம்.

அந்த நேரத்தில்தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் சுல்தார் தி வாரியர் என்ற படத்தை எடுப்பதற்காக ஒரு ஃபைனான்ஸியரிடம் பணம் வாங்கியிருக்கிறார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு கடனாகிவிட்டது. ஒரு கட்டத்தில் அந்த ஃபைனான்ஸியர் சௌந்தர்யாவுக்கு போன் செய்தும் சௌந்தர்யாவை தொடர்பு கொள்ளமுடியவில்லையாம்.

உடனே அந்த ஃபைனான்சியர் அந்த தொலைக்காட்சி உயரதிகாரியிடம் இந்த மேட்டரை சொல்லி தனக்கு உதவி பண்ணுமாறு கேட்டிருக்கிறார். ஒரு நாள் அந்த உயரதிகாரியும் ஃபைனான்ஸியரும் சௌந்தர்யாவின் அலுவலகத்திற்கே போய் அங்கிருந்த பொருள்களை எல்லாம் உடைத்து துவம்சம் பண்ணிவிட்டார்களாம். இதை வெளியிலும் ரஜினியால் சொல்ல முடியாத சூழ் நிலை. சரி விடு பார்த்துக் கொள்ளலாம் என்று ரஜினி விட்டுவிட்டாராம்.

அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சி மாற அவருக்கு வாழ்த்து சொல்ல லதா ரஜினிகாந்த் பொக்கே எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். போனவர் தன் மகளுக்கு நடந்ததையும் சேர்த்து சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். அந்த ஃபைனான்ஸியரையும் அந்த உயரதிகாரியையும் காவலில் எடுத்து உள்ளாடையுடன் நிற்க வைத்துவிட்டார் ஜெயலலிதா. இதனால் ரஜினி குடும்பம் நிம்மதியடைந்திருக்கிறது. இதை வைத்துதான் ஒரு மேடையில் ரஜினி ஜெயலலிதாவை தைரியலட்சுமி என பேசியிருப்பார் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.