‘கோட்’ படத்தின் மூலம் உருவான ஆழமான நட்பு! ‘அந்தகன்’ படத்திற்காக விஜய் செய்யப் போகும் காரியம்

prasanth
கோட் படத்திற்கு பிறகு விஜய்க்கும் பிரசாந்துக்கும் இடையே ஒரு ஆழமான நட்பு உருவாகியிருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் விஜயை பொறுத்தவரைக்கும் அவருடைய பழைய கால நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் கூட யாரும் எதிர்பாராதவிதமாக நடிகை ரம்பாவையும் அவரது குடும்பத்தையும் பார்த்து சந்தோஷப்பட்டார்.
அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் பிரசாந்துக்காக விஜய் ஒரு காரியத்தை செய்ய துணிந்து இறங்குகிறாராம். கோட் படத்திற்கு முன்பாகவே பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படம் ரிலீஸாக இருக்கின்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்தப் படம் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.
ஆனால் அதே தேதியில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் திரைப்படமும் அன்றுதான் ரிலீஸாக இருக்கின்றது.ஆனால் போனவருடம் நவம்பர் மாதமே தங்கலான் திரைப்படம் ரிலீஸாக வேண்டியதாம். அதன் தயாரிப்பாளர்தான் தள்ளி தள்ளி கடைசியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி என லாக் செய்திருக்கிறாராம். இதற்கிடையில் விக்ரமும் பிரசாந்தும் உறவினர்கள்.
ஏற்கனவே இருவர் குடும்பத்திற்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. இதில் இவர்கள் இருவரும் நடிக்கும் திரைப்படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் ஆவது ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அந்தகன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் வரும் 24 ஆம் தேதி ரிலீஸாகிறதாம். அதை விஜய்தான் ரிலீஸ் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது பிரசாந்திற்காகவே விஜய் செய்கிறார் என்றும் கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். நீண்ட எதிர்பார்ப்புடன் இருந்த அந்தகன் திரைப்படம் ஹிந்தியில் வெளியான அந்தாதூன் திரைப்படத்தின் ரீமேக். ஹிந்தியில் அந்தப் படம் மாபெரும் வெற்றி. அதனால் தமிழிலும் அந்தளவு வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.