கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்தியன் 2. இந்தப் படத்தை லைக்கா தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் போர்ஷன் மிகக் குறைவு என்றாலும் அவருடைய கேரக்டர் மக்களை வெகுவாக கவர்ந்தது.
அதே போல் கமலின் நடிப்பும் எப்போதும் போல மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் கமல் ஏற்றிருந்த கெட்டப் ரசிகர்களிடையே பெரிய க்ளாப்பையே வாங்கியது. அந்தளவுக்கு ஒவ்வொரு கெட்டப்பும் பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
அதிலும் அனிருத் இசையில் அமைந்த பாடல்கள் இந்தப் படத்திற்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை என்றும் விமர்சத்தார்கள். இந்தியன் படத்தின் முதல் பாகத்திற்கு பெரிய ஹைப்பை ஏற்படுத்தியதே ரஹ்மான் இசையில் அமைந்த பாடல்கள்தான். ஆனால் அனிருத் இசை இதில் எடுபடவில்லை. கூடவே படத்தின் நீளமும் மக்களை போரடிக்க செய்துவிட்டது.
இந்த நிலையில் இப்போது படத்தில் ஒரு 12 நிமிட காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டதாகவும் அதன் பிறகு படத்தை பார்த்த ரசிகர்கள் ஓரளவு திருப்தியடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் கமல் ஒரு முடிவை எடுத்திருக்கிறாராம். இந்தியன் 2 படத்தின் ரிசல்ட்டால் கமல் மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம். இது அப்படியே இந்தியன் 3 படத்திற்கும் வந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறாராம்.
இந்தியன் 3 படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு இரண்டு பாடல் காட்சிகள் மட்டும்தான் எடுக்க வேண்டுமாம். ஆனால் கமல் டாக்கி போர்ஷனை எடுக்கவேண்டும் என ஒரு 25 நாள்கள் சூட்டிங் போகவேண்டும் என சொல்லியிருக்கிறாராம். இனிமே இறங்கி வேலை செய்தால் இந்தியன் 3 படமும் தப்பிக்கும் என கருதியே கமல் கொஞ்சம் அந்தப் படத்திற்காக மெனக்கிட போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதை அறிந்த சில பேர் இந்த அக்கறை இந்தியன் 2 படத்தின் போதே இருந்திருந்தால் இவ்ளோ அவமானம் தேவையில்லையே என்று சொல்லி வருகிறார்கள்.
Pushpa2 Review:…
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…