அறிமுகமாகி தொடர் மூன்று ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்த ஒரே ஹீரோ! அட இவரா?

Published on: December 8, 2023
dhanush
---Advertisement---

Actor Dhanush: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். அப்பா ஒரு திறமையான இயக்குனராக இருந்தாலும் இவர் தனது சொந்த முயற்சியால் இன்று இந்தியாவே பெருமைப்படும் அளவுக்கு ஒரு உன்னதமான நடிகராக வளர்ந்து  நிற்கிறார்.

நடிகராக, இயக்குனராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக என பன்முகத்திறமைகள் கொண்ட நடிகராகவும் வலம் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என மிகப்பெரிய அளவில் உச்சம் தொட்ட நடிகராகவும் இருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழ் டைரக்டருக்கு நோ.. மலையாள டைரக்டரை லாக் செய்த யாஷ்.. படம் பேரு என்ன தெரியுமா?

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த ஒரே நடிகர் தனுஷ்தானா என்று ஒரு ரசிகர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் அறிமுகமாகி தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களை கொடுத்த நடிகர் தனுஷ் மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு நடிகர்கள் இருக்கிறார்கள் என கூறினார்.

தனுஷுடன் சேர்ந்து ஜெயம் ரவி மற்றும் கார்த்தி இவர்கள்தான் தன் அறிமுகப் படத்தை அடுத்து மூன்று தொடர்ச்சியான ஹிட் படங்களை கொடுத்த நடிகர்கள் என கூறினார். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் அதனை தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார்.

இதையும் படிங்க: நாட்டுக்கட்ட அழகு தரமா இருக்கு!.. விஜே பார்வதியை வர்ணிக்கும் புள்ளிங்கோ….

அதே போல் ஜெயம் ரவியும் ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி மற்றும் தாஸ் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். இவரைப் போலவே நடிகர் கார்த்தியும் பருத்திவீரன் என்ற ப்ளாக் பஸ்டர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன், பையா போன்ற மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தார். இவர்களை போல் அறிமுகமாகி தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களை கொடுத்த நடிகர் வேறு யாருமில்லை என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: கோலிவுட்டில் களமிறங்கும் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக்..! ஹீரோ இந்த நடிகர் தானாம்..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.