ஜெய்லர் பட பாணியில் ஒரே படத்தில் மல்டி ஸ்டார் நடிகர்களை நடிக்க வைத்தனர். ரஜினிக்காக ஒரு கூட்டம் படத்தினை பார்த்து இருந்தாலும் மல்டி ஸ்டார் நாயகர்களுக்காகவே படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்தியது. அட இது நல்லாருக்கே என்ற பாணியில் இதை பலமொழி நடிகர்களும் பாலோ செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
ஒரு பக்கம் லியோ படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பாட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் விஜயே கேமியோ ரோலா பண்ணுறாரு எனக் கேட்கும் அளவுக்கு கூட்டம் அதிகமாகியது. ஆனால் கண்டிப்பாக இந்த அணுகுமுறை வெற்றி பெறும் என பலரும் நம்புகின்றனர்.
இதையும் படிங்க : ‘கடைசி விவசாயி’ நல்லாண்டி வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா?!.. அட பாவமே!…
தொடர்ந்து, தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் கல்கி 2898 ஏடி படத்தில் இந்த மல்டி ஸ்டார் அம்சத்தினை வைக்கலாம் என்ற முடிவில் படக்குழு இருக்கிறது. இப்படத்தினை நாக் அஸ்வின் இயக்க இருக்கிறார். இப்படம் சயின்ஸ் பிக்ஷன் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கிறது. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உட்பட பலர் நடிக்க இருக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் ராஜமௌலி கூட ஒரு முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார். முதலில் ப்ராஜக்ட் கே என வெளியிடப்பட்ட இப்படம் பின்னர் கல்கி 2898 ஏடி என மாற்றப்பட்டது.
இதையும் படிங்க : இந்த நடிகர மட்டும் வச்சு நான் டைரக்ட் பண்ண மாட்டேன்! ஷாக் தகவலை கூறிய தளபதி வாரிசு
ஏற்கனவே அதிபுருஷ்ஷால் ட்ரோல் மெட்டிரியலாக மாறிய பிரபாஸின் படங்கள் அனைத்துமே வசூலில் மோசமான நிலையில் இருக்கிறது. அதனால் இந்த படத்தினை வெற்றி படமாக மாற்ற படக்குழு போராடத்தான் வேண்டும் என்கின்றனர். இந்த படத்தின் முதல் லுக்கே ஐயர்ன்மேன் மாதிரி இருப்பதாக கூட கிசுகிசுக்கள் எழுந்தது.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிகர் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் மெயின் வில்லனான கமலுக்கு பிரத்யேக தோற்றத்திற்கே மூன்று மணி நேரம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. பத்து கெட்டப் போட்டவருக்கு இந்த ஒத்த கெட்டப் கசக்குமா? அவர் லெஜண்ட்டுல என பலரும் கமலுக்கு பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.