ரஜினியும் தனுஷும் ஒரே இடத்துலயா? என்ன மேட்டர் தெரியுமா? - ஒரே திக் திக் தான்!..
தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வலம் வந்தாலும் ரஜினியின் மருமகன் என்று மற்றுமொரு பெருமையும் இருக்கின்றது நடிகர் தனுஷுக்கு. ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தனுஷ் திருமணம் செய்த பிறகு ரஜினியின் குடும்பத்தோடு மிகவும் நெருக்கமானார் தனுஷ். லதா ரஜினிகாந்தை தன் தாயை போல கைப் பிடித்து அழைத்துப் போவதும் ரஜினியின் அருகில் பவ்யமாக இருப்பதும் என காணப்பட்டார்.
மருமகன் என்பதை தாண்டியும் ரஜினியின் ரசிகன் என்பதை பெரும்பாலான தன் படங்களின் மூலம் காண்பித்தார் தனுஷ். தனுஷின் குணாதிசயங்கள் கிட்டத்தட்ட ரஜினியை ஒட்டியே காணப்பட்டன. ஸ்டைல், நடை என ரஜினியை அப்படியே காப்பி அடித்தார் தனுஷ்.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்சினை எழுந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ரஜினியின் படங்கள் ரிலீஸ் மற்றும் புதிய படத்தின் அப்டேட் பற்றி செய்திகள் வரும் போதெல்லாம்ல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் தவறாமல் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்.
அவர்கள் பிரிவுக்கு பிறகு ரஜினியும் தனுஷும் எந்த மேடையிலும் ஒன்றாக சந்தித்துக் கொண்டதே இல்லை. ஆனால் அந்த ஒரு நிகழ்வு கூடிய சீக்கிரம் நடக்கும் என எதிர்பார்க்க கைகூடி வந்த நிகழ்வு கூடாமலேயே போய்விட்டது. உதய நிதி , வடிவேலு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன்னன். அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
அந்த விழாவிற்கு கமல், ரஜினி, தனுஷ் ஆகியோரை அழைத்திருக்கின்றனர். தனுஷ், கமல் வருவதாக தெரிவிக்க ரஜினிக்கு அந்த தேதியில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இருக்கிறதாம். அதனால் ரஜினி அந்த விழாவிற்கு வரமாட்டார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க :‘விடாமுயற்சி’னுதான் பேரு – எடுக்கிற முயற்சிலாம் வீணா போகுது!.. இப்போதைக்கு வாய்ப்பில்லங்க! எடுடா பைக்க!