போடு அஜித்துடன் மோதும் கமல்! சூர்யா மாதிரி பின்வாங்குறதா இல்ல.. போட்டிக்கு ரெடி
Ajith Kamal: குட் பேட் அக்லி மற்றும் தக் லைஃப் போன்ற திரைப்படங்கள் பொங்கலுக்கு மோத இருப்பதாக சமீபத்திய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.
அந்தப் படத்தின் பூஜை சமயத்திலேயே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருந்தார்கள். அடுத்த வருடம் பொங்கல் அன்று படம் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
ஆனால் விடாமுயற்சி படமும் எப்போது ரிலீஸ் என்பதே தெரியவில்லை. அதுவும் ஒரு வேளை பொங்கலாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதுதான் இப்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங்காகி வருகிறது. அதாவது தக் லைஃப் படமும் விடாமுயற்சி படமும் பொங்கல் அன்று ரிலீஸாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: நான் சி.எஸ்.கே ரசிகன்!.. கோட் படம் ஓடனலனா நான் ஒன்னும் பண்ண முடியாது!.. பொங்கிய விபி!…
அதனால் அடுத்த வருடம் பொங்கலுக்கு அஜித் மற்றும் கமல் நேரடியாக மோத இருக்கிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் முழுவதும் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே கமல் நடிப்பில் தூங்காவனம் மற்றும் அஜித்தின் வேதாளம் போன்ற திரைப்படங்கள் ஒன்றாக ரிலீசாகி இருந்தன.
அதன் பிறகு இருவரின் திரைப்படங்கள் அடுத்த வருடம் ரிலீசாக இருக்கின்றன. ஏற்கனவே வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே சூர்யாவின் கங்குவா திரைப்படமும் அதே தேதியில் தான் ரிலீஸ் ஆக ப்போவதாக அறிவித்திருந்தார்கள் .
இதையும் படிங்க: முதல் தமிழ் ஹீரோ! சிம்பு பண்ண ஒரு நல்ல விஷயம்.. தூக்கி வச்சு கொண்டாடும் நெட்டிசன்கள்
ஆனால் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 என லாக் செய்ததும் கங்குவா திரைப்படம் பின்வாங்கி விட்டது. அது மட்டுமல்லாமல் கங்குவா திரைப்படம் ஒரு குழந்தை. அதனால் ரஜினி சார் திரைப்படம் முதலில் வெளியாகட்டும் என சூர்யா ஒரு பேட்டியில் கூறி இருந்தது மிகவும் வைரலானது.
ஆனால் அஜித்தை பொருத்தவரைக்கும் அவர் கொண்ட ஒரு முடிவில் என்றைக்குமே அவர் பின் வாங்கியதே இல்லை. அது கமலாக இருந்தாலும் சரி. ரஜினியாக இருந்தாலும் சரி. சூர்யாவை போல அஜித் பின்வாங்க மாட்டார். அதனால் கண்டிப்பாக பொங்கல் அன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அஜித் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: ஜெயம் ரவி-ஆரத்தி விவகாரத்து காரணம் இதானா? முக்கிய சேதியை உடைத்த பிரபலம்
அதே தேதியில் கமலின் தக் லைஃப் திரைப்படமும் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. நீண்ட வருடங்கள் பிறகு மீண்டும் கமலும் அஜித்தும் மோதும் ஒரு போட்டியாக இது இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
தீபாவளிக்கு ஏற்கனவே மூன்று திரைப்படங்கள் வரிசையில் நிற்கின்றன. அதோடு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் களம் இறங்குமா என்பது சந்தேகம்தான்.அதனால் பொங்கலுக்கு அஜித்தின் இரு படங்களும் ரிலீஸாகுமா அல்லது வேறு வேறு ரிலீஸாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதனால் இப்போது சினிமாவில் பெரிய பெரிய நடிகர்களின் படங்களின் ரிலீஸ் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றன.