Connect with us

Cinema News

நீண்ட வருடங்களுக்கு பிறகு காமெடி கதைக்களத்தில் அஜித்.! ரகளையான அடுத்தடுத்த அப்டேட்…!

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமா “AK61” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை படக்குழு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், படப்பிடிப்பு இழுத்து கொண்டே செல்வதால், இந்த ஆண்டு இறுதியில் தான் முடிவடையும் போல் தெரிகிறது.

இதனை தொடர்ந்து, நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருட தொடக்கத்தில் அதாவது, ஜனவரி மாதம் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குள் தனது ஏகே 61 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்களேன்- சன் பிக்ச்சர்ஸுக்கும் உதயநிதிக்கும் இடையே உரசல்?…தனுஷ் படம்தான் காரணமா?….

தற்போது, அஜித்தின் ‘ஏகே 62’ திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் என்னெவென்றால், இந்த படத்தில் அஜித் காமெடியாகவும் ஜாலியாகவும் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இத்னால், ரசிகர்கள் தங்கள் நாயகனை பழைய பாணியில் பார்க்க ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். நடிகர் அஜித் முன்பு நடித்தது போல் ‘ஏகே 62’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top