எம்ஜிஆர் காலத்திற்கு பிறகு அஜித் படத்துல தான் அத வச்சேன்! வாலி சொன்ன சீக்ரெட்

by Rohini |
vaali
X

vaali

தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற கவிஞராக விளங்கியவர் வாலி. சிறந்த பாடலாசிரியர் என்பதையும் தாண்டி ஓவியத்திலும் தலைசிறந்தவராக விளங்கியிருக்கிறார் வாலி. எளிய தமிழ் நடையில் வரிகளை எழுதி ரசிகர்களை கவர்ந்தவர். அது தத்துவப் பாடல்களாகட்டும், கவித்துவமான பாடல்களாகட்டும். காட்சிக்கேற்ப வரிகளை அமைத்து புகழ் பெற்றவர்.

தமிழுக்கே தலை சிறந்தவராக விளங்கிய கண்ணதாசனுக்கே டஃப் கொடுத்த கவிஞர் தான் வாலி. இந்த நிலையில் ஒரு பேட்டியில் வாலி அஜித் படத்தில் அவர் எழுதிய பாடலின் ரகசியத்தை பற்றி கூறியிருந்தார்.

இதையும் படிங்க : த்ரிஷாவோட அந்த இடத்துல அவரு கை வைச்சாரு!.. சும்மாதான் இருந்தாங்க!. நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல்!..

அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த 50வது படம்தான் மங்காத்தா. படம் மாபெரும் வசூல் சாதனையுடன் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. அதில் வாலி த்ரிஷாவுக்காக ஒரு பாடல் வரியை எழுதியிருப்பார். அதாவது அஜித்தின் சுயரூபம் தெரிந்து தான் காதலித்தவன் இப்படிப்பட்டவனா என எண்ணி அஜித்தை நினைத்து உருகி பாடுவது போல அமைந்த வரிதான்.

என் நண்பனே என்னை எய்த்தாய்… ஓ…
என் பாவமாய் வந்து வாய்த்தாய்…
உன் போலவே நல்ல நடிகன்… ஓ…
ஊா் எங்கிலும் இல்லை ஒருவன்… இதுதான் அந்த பாடல் வரிகள். இதை பற்றி வாலி கூறும் போது காதல் தோல்வியில் கதாநாயகிகள் வருந்தி பாடுவது என்பது மிகவும் குறைவுதான்.

இதையும் படிங்க : எனக்கு இனி வேணாம்… ஈகோலாம் இல்லை… லாரன்ஸை மாற்றிய விஜய் வார்த்தை!

அந்தக் காலத்தில் கண்ணதாசன் ஆனந்த ஜோதி படத்திற்காக காதல் தோல்வியில் தேவிகாவிற்காக ‘ நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா’ என உருகுவது போல் எழுதியிருப்பார். அதே போல் நானும் ஒரு சில பாடல்களுக்கு எழுதியிருக்கேன்.

ஆனால் அந்தக் காலத்திற்கு பிறகு அஜித் படமான மங்காத்தா படத்தில் தான் அப்படிப்பட்ட வரிகளை எழுதிக் கொடுத்தேன் என்று வாலி கூறியிருந்தார். மேலும் அந்தப் படத்தில் ஹிட் அடிக்காத ஒரே பாடலாகவும் இது அமைந்தது எனவும் ஒரு சில பேருக்கு மிகவும் பிடித்த பாடலாகவும் இருந்தது என்றும் வாலி கூறினார்.

Next Story