Cinema History
எம்.எஸ்.விக்கு அப்புறம் அந்த திறமை தேவாவுக்கு மட்டும்தான் உண்டு… வாலி சொன்ன சீக்ரெட்!..
கவிஞர் வாலி தமிழ் சினிமாவில் வெகு காலமாக பாடலாசிரியராக இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர் காலக்கட்டம் முதலே பாடல்களுக்கு வரிகளை எழுத துவங்கியவர். இதனால் பழைய தலைமுறைக்கும் புது தலைமுறைக்கும் வாலி ஒரு பாலமாக இருந்துள்ளார்.
தமிழில் உள்ள அனைத்து இசையமைப்பாளர்களோடும் வாலி பணியாற்றியுள்ளார். அதில் முக்கியமானவர் தேவா. இளையராஜா, ஏ.ஆர் ரகுமானுக்கு பிறகு தனக்கென தனிப்பட்ட இசை முறையை வைத்துக்கொண்டு ஹிட் பாடல்களாக கொடுத்து வந்தவர் தேவா.
தேவா கானா பாடல்களுக்காக மிகவும் பிரபலமானவர். கானா பாடல்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை அவர்தான் உருவாக்கினார். வாலி ஒரு பேட்டியில் கூறும்போது தேவாவை பற்றிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
தேவாவின் திறமை:
பொதுவாக இசையமைப்பாளர்கள் என்பவர்கள் முதலில் அவர்கள் பாடல்களுக்கான இசையை அமைத்துவிடுவார்கள். அந்த மெட்டுக்கு தகுந்தாற் போல பாடலாசிரியர்கள் ஒரு பாட்டை எழுதுவார்கள். அதை பாடகர்கள் பாடுவார்கள். ஆனால் எம்.எஸ்.வி போன்ற சில ஜாம்பவான்கள் பாடல் வரியை வைத்து இசையமைக்க கூடியவர்கள்.
அதாவது ஒரு பாடலுக்கான வரியை முன்பே எழுதிக்கொடுத்துவிட்டால் அதற்கு தகுந்தாற் போல அவர்கள் இசையமைத்துவிடுவார்கள். கிட்டத்தட்ட அதே திறனை கொண்டிருந்தவர் தேவா என வாலி கூறுகிறார். எம்.எஸ்.விக்கு பிறகு அந்த திறமை தேவாவிற்கு மட்டுமே இருந்தது என அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என் கேரக்டரே வேற!.. என்னை யாருனு நினைச்சீங்க?.. பிக்பாஸில் சைலண்டா இருந்ததன் காரணத்தை கூறிய ஜித்தன் ரமேஷ்..