விரைவில் சந்திக்கிறேன்.. பத்மபூஷன் பெற்ற கையோடு விமான நிலையத்தில் அஜித் பேட்டி

by Rohini |   ( Updated:2025-04-29 09:03:47  )
padma
X

padma

Ajith: தமிழ் நாட்டுக்கு தொடர்ந்து பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். நேற்று அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் பதம் பூஷன் விருது கிடைத்தது ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சி. கலைத்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயலாற்றியதற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்த விருதை தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து டெல்லியில் பெற்றுக் கொண்டார் அஜித்.

அவருடைய தொடர் இந்த மாற்றத்திற்கு பக்கபலமாக இருப்பது அவருடைய மனைவியும் நடிகையுமான ஷாலினிதான். இதை அஜித் பல இடங்களில் தெளிவுபடுத்தியிருக்கிறார். இன்னொரு பக்கம் ரேஸிலும் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறார். துபாயில் நடந்த கார் ரேஸிலும் அவருடைய அணி மூன்றாவது இடத்தை பெற்று சாதனை படைத்தது. கடைசியாக போர்ச்சுகலில் நடந்த ரேஸிலும் அவருடைய அணி இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்தது.

இதன் மூலம் இந்தியா சார்பாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் அமைப்பை பெரிய அளவில் பிரபலப்படுத்தி வருகிறார் அஜித். இந்த நிலையில்தான் இந்த பத்ம பூஷன் விருதும் கிடைத்தது இன்னும் கூடுதல் பெருமையாக பார்க்கப்படுகிறது. விருதை பெற்ற கையோடு விமான நிலையத்தில் அஜித்தை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் அவரிடம் சில கேள்விகளை கேட்டனர்.

அப்போது அஜித் இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் நான் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். கூடிய சீக்கிரம் விரைவில் நேரில் சந்திக்கிறேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனக்கு பக்கபலமாக இருந்த என்னுடைய குடும்பம், சகோதரர், மனைவி, குழந்தைகளுக்கும் நன்றி, எனக்காக ஷாலினி நிறைய விஷயங்களை தியாகம் செய்திருக்கிறார்.

ஷாலினியும் பிரபலமானவர்தான். அவரையும் விரும்பும் ஏராளமான ரசிகர்கள் இன்னும் இருக்கின்றனர். எல்லா விஷயங்களிலும் என்கூடவே இருந்திருக்கிறார். என்றைக்கும் என்னை அவர் குறைத்து மதிப்பிட்டதே இல்லை. ஒவ்வொரு நாளும் ஊக்கப்படுத்திக் கொண்டேதான் இருப்பார். நான் அடையும் எல்லா புகழும் அவருக்குத்தான் சமர்ப்பிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்திருக்கிறார். மேலும் நான் வெற்றி தோல்விகளை அதிகமாக பார்த்திருக்கிறேன். ஆனால் என்னுடைய ரசிகர்கள் என்னை பார்த்து ஈர்க்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.நான் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். கூடிய சீக்கிரம் விரைவில் நேரில் சந்திக்கிறேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனக்கு பக்கபலமாக இருந்த என்னுடைய குடும்பம், சகோதரர், மனைவி, குழந்தைகளுக்கும் நன்றி, எனக்காக ஷாலினி நிறைய விஷயங்களை தியாகம் செய்திருக்கிறார்.

என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்திருக்கிறார். மேலும் நான் வெற்றி தோல்விகளை அதிகமாக பார்த்திருக்கிறேன். ஆனால் என்னுடைய ரசிகர்கள் என்னை பார்த்து ஈர்க்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Next Story