BB Tamil 9: ரெட் கார்டுக்கு பிறகு பாரு – கம்ருதீன் சந்திக்கும் பிரச்சினைகள்! இவ்ளோ இருக்கா?

Published on: January 4, 2026
kamruthin
---Advertisement---

நேற்று அனைவரும் எதிர்பார்த்த விஷயம் பிக்பாஸில் அரங்கேறியிருக்கிறது. பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்து விஜய்சேதுபதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியிருக்கிறார். ஆனால் ரசிகர்கள் அனைவரும் வழக்கம் போல விஜய்சேதுபதி பார்வதியையும் கம்ருதீனையும் திட்டி மீண்டும் வழக்கம் போல் வீட்டில் உட்கார வைத்துவிடுவார் என்றுதான் நினைத்தார்கள்.

ஆனால் திடீரென விஜய்சேதுபதி இரண்டு ரெட் கார்டையும் நீட்டிய பிறகு ரசிகர்கள் உட்பட பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களும் பயங்கர குஷியாகிவிட்டனர். குறிப்பாக அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தையும் பார்க்க முடிந்தது. சாண்ட்ரா விஷயத்தில் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் கொஞ்சம் ஓவராகவே நடந்து கொண்டனர். இதுதான் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களுக்கும் பெரும் அதிருப்தியை தந்தது.

இதற்கு முன் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரின் அநாகரீகமான செயல் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது. இருவரும் இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை சர்வ சாதாரணமாக பேசியதும் காது கொடுத்து கேட்க முடியவில்லை. இதையும் ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்பவே இவர்கள் இருவரையும் வெளியே அனுப்பினால்தான் சரி வரும் என்று மக்கள் குரல் கொடுத்து வந்தனர்.

ஆனால் சாண்ட்ரா விஷயம் சமூக வலைதளங்களில் தீப்பிடிக்க ஒட்டுமொத்தமாக இருவரையும் தூக்கி வெளியே போட்டுவிட்டார் விஜய்சேதுபதி. ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் கண்டெண்ட் கொடுப்பதே இவர்கள் இருவரும் தான். அதனால் நிர்வாகம் கொஞ்சம் யோசிக்க, விஜய்சேதுபதிக்கு தொடர்ந்து மெயில்கள் மூலமாக மக்கள் பிரஷரை போட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால் விஜய்சேதுபதி கொடுத்த பிரஷர்தான் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் நேற்று வெளியேறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சரி இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டுவிட்டது. இதன் பிறகு இவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பது பற்றியும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. பொதுவாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் கொடுக்கப்பட மாட்டாதாம். நிகழ்ச்சி மொத்தமாக முடிந்த பிறகுதான் அவர்களுக்குண்டான சம்பளம் கொடுப்படுமாம். அதற்கு இடையில் விஜய் டிவியில் பல எண்டெர்டெயின்மெண்ட் நிகழ்ச்சிகளுக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் விருந்தினர்களாக அழைக்கபடுவார்கள்.

அதற்கு அவர்கள் கலந்து கொள்ள வேண்டும். பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடக்கும். அதிலும் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும். வெளி நாடுகளிலும் நடக்கும் நிகழ்ச்சிக்கும் இவர்கள் அழைக்கப்படுவார்கள். இதுதான் வழக்கமாக இருக்கும். ஆனால் இதில் ரெட் கார்டு வாங்கியவர்கள் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கப்பட மாட்டார்களாம். பிக்பாஸ் கொண்டாட்டத்திலும் இவர்கள் அழைக்கப்படமாட்டார்கள்,

இதில் இவர்களுக்குண்டான சம்பளமும் ரத்தாகும் என்றே தெரிகிறது. பார்வதி மற்றும் கம்ருதீன் இதுவரை 92 நாள்கள் வீட்டிற்குள் இருந்திருக்கின்றனர். அந்த நாளுக்குண்டான சம்பளம் இவர்களுக்கு போகாது என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இதையெல்லாம் எப்படி இவர்கள் சரி செய்து மீண்டு வரப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.